• Sep 22 2024

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பெண்களின் நிலைமைகளை கருத்தில்கொண்டு வீட்டுத்திட்டம்...!samugammedia

Sharmi / Oct 10th 2023, 6:09 pm
image

Advertisement

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பெண்களின் நிலைமைகளை கருத்தில்கொண்டு அவர்களுக்கான வீட்டுத்திட்டம் ஒன்றை அமைப்பதற்கான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தொழிலுறவு,வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார தெரிவித்தார்.

தொழிலுறவு,வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்தினை வினைத்திறன் மிக்கதாக மாற்றும் நடவடிக்கைகளை தொழிலுறவு,வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு முன்னெடுத்து வருகின்றது.

இதன்கீழ் கிழக்கு மாகாணத்தின் மக்களின் நன்மை கருதி தொழிலுறவு,வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்தினை வினைத்திறன் மிக்கதாக மாற்றி அதன் ஊடாக சிறந்த சேவையினை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதனடிப்படையில் தொழிலுறவு,வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்தில் கடiமாயாற்றும் உத்தியோகத்தர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய பிரிவினருக்கான விசேட செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் டேபா மண்டபத்தில் கிழக்கு மாகாணத்திற்கான நிகழ்வாக தொழிலுறவு,வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார தலைமையில் இந்த செயலமர்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தொழிலுறவு,வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் ஆர்.பி.விமலவீர,மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஸினி சிறிக்காந்த்,அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜெகதீஸ்வரன்,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் மற்றும் தொழிலுறவு,வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு,திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தொழிலுறவு,வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களினால் விளக்கமளிக்கப்பட்டதுடன் மாவட்டங்களின் நிலைமைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.



வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பெண்களின் நிலைமைகளை கருத்தில்கொண்டு வீட்டுத்திட்டம்.samugammedia வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பெண்களின் நிலைமைகளை கருத்தில்கொண்டு அவர்களுக்கான வீட்டுத்திட்டம் ஒன்றை அமைப்பதற்கான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தொழிலுறவு,வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார தெரிவித்தார்.தொழிலுறவு,வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்தினை வினைத்திறன் மிக்கதாக மாற்றும் நடவடிக்கைகளை தொழிலுறவு,வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு முன்னெடுத்து வருகின்றது.இதன்கீழ் கிழக்கு மாகாணத்தின் மக்களின் நன்மை கருதி தொழிலுறவு,வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்தினை வினைத்திறன் மிக்கதாக மாற்றி அதன் ஊடாக சிறந்த சேவையினை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.இதனடிப்படையில் தொழிலுறவு,வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்தில் கடiமாயாற்றும் உத்தியோகத்தர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய பிரிவினருக்கான விசேட செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடாத்தப்பட்டது.மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் டேபா மண்டபத்தில் கிழக்கு மாகாணத்திற்கான நிகழ்வாக தொழிலுறவு,வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார தலைமையில் இந்த செயலமர்வு நடைபெற்றது.இந்த நிகழ்வில் தொழிலுறவு,வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் ஆர்.பி.விமலவீர,மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஸினி சிறிக்காந்த்,அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜெகதீஸ்வரன்,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் மற்றும் தொழிலுறவு,வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு,திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.இதன்போது தொழிலுறவு,வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களினால் விளக்கமளிக்கப்பட்டதுடன் மாவட்டங்களின் நிலைமைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement