ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் சுகாதாரப் பணியாளர்களினால் சேகரிக்கப்படும் நகரக் கழிவுகள், காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் பாயும் டிக்கோயா ஓடையில் சட்டவிரோதமாகக் கொட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
டெங்கு ஒழிப்பு வாராந்தம் நடைமுறையில் இருக்கும் இக்காலகட்டத்தில், நகர சபைப் பணியாளர்கள் கைவண்டிகள் மூலம் கழிவுகளைக் கொண்டு வந்து, ஹட்டன்
பிரதான வீதியில் அமைந்துள்ள டிக்கோயா ஓடைப் பகுதியில் கொட்டிச் செல்வது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.
இவ்வாறு கொட்டப்படும் கழிவுகளைத் தெருநாய்கள் இழுத்துச் சிதறடிப்பதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், பாரிய சூழல் மாசடைவும் ஏற்பட்டுள்ளது.
தற்போது நிலவும் மோசமான காலநிலை காரணமாக, இப்பாதையால் பயணிக்கும் பாதசாரிகளும் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் இதற்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
டிக்கோயா நகரக் கழிவுகள் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் கொட்டப்படுவதால் பெரும் பாதிப்பு ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் சுகாதாரப் பணியாளர்களினால் சேகரிக்கப்படும் நகரக் கழிவுகள், காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் பாயும் டிக்கோயா ஓடையில் சட்டவிரோதமாகக் கொட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.டெங்கு ஒழிப்பு வாராந்தம் நடைமுறையில் இருக்கும் இக்காலகட்டத்தில், நகர சபைப் பணியாளர்கள் கைவண்டிகள் மூலம் கழிவுகளைக் கொண்டு வந்து, ஹட்டன் பிரதான வீதியில் அமைந்துள்ள டிக்கோயா ஓடைப் பகுதியில் கொட்டிச் செல்வது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இவ்வாறு கொட்டப்படும் கழிவுகளைத் தெருநாய்கள் இழுத்துச் சிதறடிப்பதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், பாரிய சூழல் மாசடைவும் ஏற்பட்டுள்ளது.தற்போது நிலவும் மோசமான காலநிலை காரணமாக, இப்பாதையால் பயணிக்கும் பாதசாரிகளும் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் இதற்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.