பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான பாகிஸ்தான் வைத்திய அறிவியல் கழகத்தின் (PIMS) வைத்தியசாலை மகப்பேறு பிரிவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் புதிதாகப் பிறந்த 15 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த மகப்பேறு பிரிவில் பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டி (AC) அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் நர்சரி அறையில் 16 குழந்தைகள் இருந்ததாகவும், அவர்களில் ஒரு குழந்தை மாத்திரமே பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நர்சரி அறையில் பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டியின் கம்ப்ரசர் வெடித்தமையே தீ பரவுவதற்குக் காரணமாக இருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ தற்போது முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தீயணைப்பு வீரர்கள் அப்பகுதியில் குளிர்விக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தீயணைப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதுடன், எஞ்சியுள்ள புகையைக் கட்டுப்படுத்தும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வைத்தியசாலையில் பாரிய தீ; 15 பச்சிளம் குழந்தைகள் பலி ஒரு குழந்தையே உயிருடன் மீட்பு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான பாகிஸ்தான் வைத்திய அறிவியல் கழகத்தின் (PIMS) வைத்தியசாலை மகப்பேறு பிரிவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் புதிதாகப் பிறந்த 15 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த மகப்பேறு பிரிவில் பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டி (AC) அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தீ விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் நர்சரி அறையில் 16 குழந்தைகள் இருந்ததாகவும், அவர்களில் ஒரு குழந்தை மாத்திரமே பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.நர்சரி அறையில் பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டியின் கம்ப்ரசர் வெடித்தமையே தீ பரவுவதற்குக் காரணமாக இருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.தீ தற்போது முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தீயணைப்பு வீரர்கள் அப்பகுதியில் குளிர்விக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தீயணைப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதுடன், எஞ்சியுள்ள புகையைக் கட்டுப்படுத்தும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.