கிளிநொச்சி மாவட்டத்தில் வாழைக்குலை விலையின் வீழ்ச்சி காரணமாக பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக வாழைச் செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்
ஒரு கிலோ கதலி வாழைக்காய் 15 ரூபா தொடக்கம் 20 ரூபாவுக்கு கொள்வனவு இடம்பெறுவதால் தமது உற்பத்தி செலவுக்கேற்ப விற்பனை செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் குருவிகளும் குரங்குகளுமே அவற்றை சாப்பிடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
குறைந்த விலையில் சந்தையில் கொடுப்பதற்கு கொண்டு செல்வதற்கான செலவே விற்பனை செய்கின்ற வாழைக்குலையில் கிடைக்காத நிலையில் மரத்துடனே அப்படியே விட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
வெளிமாவட்ட வியாபாரிகளும் கொள்வனவுக்கு வருவதில்லை என தெரிவிக்கின்றனர்.
வாழைக்குலை விலையின் வீழ்ச்சியால் பாரிய நஷ்டம்; தொழிலை கைவிடும் நிலையில் கிளிநொச்சி செய்கையாளர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் வாழைக்குலை விலையின் வீழ்ச்சி காரணமாக பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக வாழைச் செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இதுதொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் ஒரு கிலோ கதலி வாழைக்காய் 15 ரூபா தொடக்கம் 20 ரூபாவுக்கு கொள்வனவு இடம்பெறுவதால் தமது உற்பத்தி செலவுக்கேற்ப விற்பனை செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் குருவிகளும் குரங்குகளுமே அவற்றை சாப்பிடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.குறைந்த விலையில் சந்தையில் கொடுப்பதற்கு கொண்டு செல்வதற்கான செலவே விற்பனை செய்கின்ற வாழைக்குலையில் கிடைக்காத நிலையில் மரத்துடனே அப்படியே விட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.வெளிமாவட்ட வியாபாரிகளும் கொள்வனவுக்கு வருவதில்லை என தெரிவிக்கின்றனர்.