வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலக கலாசாரப் பிரிவின் ஏற்பாட்டில், சமூகத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் "போதைகளால் பாதிப்படையும் மனித உரிமைகள்" எனும் தொனிப்பொருளிலான வீதி நாடகம் இன்று மிகச் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது.
வவுனியா சிவாலயா நாடகக் குழுவின் தலைவரும், கலைஞருமான வி. விஜயகுமார் அவர்களின் நெறியாள்கையில் இந்த நாடகம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
போதைப் பழக்கத்தினால் மனித உரிமைகள் எவ்வாறு மீறப்படுகின்றன என்பதையும், அதனால் ஏற்படும் சமூகச் சீரழிவுகளையும் தத்ரூபமாக இந்நாடகம் மக்கள் மத்தியில் வெளிப்படுத்தியது.
இந்நிகழ்விற்கு "நீதிக்கான மக்கள் அமைப்பு" (People’s Organization for Justice) பிரதான அனுசரணையினை வழங்கியிருந்தது. அத்துடன், பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்த வீதி நாடகம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறான கலை முயற்சிகள் மூலம் போதையற்ற ஒரு ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என நிகழ்வின் இறுதியில் சுட்டிக்காட்டப்பட்டது
வவுனியாவில் "போதைகளால் பாதிப்படையும் மனித உரிமைகள்" விழிப்புணர்வு வீதி நாடகம் வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலக கலாசாரப் பிரிவின் ஏற்பாட்டில், சமூகத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் "போதைகளால் பாதிப்படையும் மனித உரிமைகள்" எனும் தொனிப்பொருளிலான வீதி நாடகம் இன்று மிகச் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது.வவுனியா சிவாலயா நாடகக் குழுவின் தலைவரும், கலைஞருமான வி. விஜயகுமார் அவர்களின் நெறியாள்கையில் இந்த நாடகம் வடிவமைக்கப்பட்டிருந்தது.போதைப் பழக்கத்தினால் மனித உரிமைகள் எவ்வாறு மீறப்படுகின்றன என்பதையும், அதனால் ஏற்படும் சமூகச் சீரழிவுகளையும் தத்ரூபமாக இந்நாடகம் மக்கள் மத்தியில் வெளிப்படுத்தியது.இந்நிகழ்விற்கு "நீதிக்கான மக்கள் அமைப்பு" (People’s Organization for Justice) பிரதான அனுசரணையினை வழங்கியிருந்தது. அத்துடன், பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்த வீதி நாடகம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.இவ்வாறான கலை முயற்சிகள் மூலம் போதையற்ற ஒரு ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என நிகழ்வின் இறுதியில் சுட்டிக்காட்டப்பட்டது