நபர் ஒருவருக்கு விசப்பூச்சி கடித்த நிலையில் அவரை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அங்கு சிகிச்சை வழங்குவதற்கு யாரும் இருக்கவில்லை என்ற பிரச்சினை எழுந்துள்ள நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் கடந்த 17.07.2024 அன்று இரவு விசபூச்சியின் கடிக்குள்ளான தனது தந்தையினை சிகிச்சைக்காக கொண்டு சென்ற வேளையில் மருத்துவமனையில் இரவு மருத்துவர்களோ, தாதியர்களோ இருக்கவில்லை.
இந்நிலையில் யாரும் அங்கு இல்லாத காரணத்தினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் செய்திகள் பிரசுரிக்கப்பட்டன.
செய்தி தொடர்பில் 1996 ஆம் ஆண்டு 21 இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 14 இற்கு அமைய, ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையாக பதிவுசெய்யப்பட்டு சாவகச்சரி ஆதார வைத்திசாலையின் பதில் மருத்துவ அத்தியட்சகர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணம், மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வடக்கு மாகாணம் ஆகியோரிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த விளக்க அறிக்கையை எதிர்வரும் 22.07.2024 இற்கு முன் சமர்ப்பிக்க பணிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சென்ற நோயாளிக்கு சிகிச்சை வழங்கப்படாத விவகாரம் - தலையிட்டது மனித உரிமைகள் ஆணைக்குழு நபர் ஒருவருக்கு விசப்பூச்சி கடித்த நிலையில் அவரை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அங்கு சிகிச்சை வழங்குவதற்கு யாரும் இருக்கவில்லை என்ற பிரச்சினை எழுந்துள்ள நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் கடந்த 17.07.2024 அன்று இரவு விசபூச்சியின் கடிக்குள்ளான தனது தந்தையினை சிகிச்சைக்காக கொண்டு சென்ற வேளையில் மருத்துவமனையில் இரவு மருத்துவர்களோ, தாதியர்களோ இருக்கவில்லை.இந்நிலையில் யாரும் அங்கு இல்லாத காரணத்தினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் செய்திகள் பிரசுரிக்கப்பட்டன.செய்தி தொடர்பில் 1996 ஆம் ஆண்டு 21 இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 14 இற்கு அமைய, ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையாக பதிவுசெய்யப்பட்டு சாவகச்சரி ஆதார வைத்திசாலையின் பதில் மருத்துவ அத்தியட்சகர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணம், மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வடக்கு மாகாணம் ஆகியோரிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.குறித்த விளக்க அறிக்கையை எதிர்வரும் 22.07.2024 இற்கு முன் சமர்ப்பிக்க பணிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளார்.