• Feb 08 2025

மனைவி , மகளை கூரிய ஆயுதத்தால் தாக்கிய கணவன் – மனைவி உயிரிழப்பு

Tharmini / Feb 8th 2025, 3:22 pm
image

புத்தளம் ஹஸ்திபுர பகுதியில் தந்தை ஒருவர் தனது மகள் மற்றும் மனைவியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (7) நண்பகல் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்த இருவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் புத்தளம், கல்லடி பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


மனைவி , மகளை கூரிய ஆயுதத்தால் தாக்கிய கணவன் – மனைவி உயிரிழப்பு புத்தளம் ஹஸ்திபுர பகுதியில் தந்தை ஒருவர் தனது மகள் மற்றும் மனைவியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று (7) நண்பகல் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்த இருவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் புத்தளம், கல்லடி பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement