• Dec 17 2025

பிட்டு தயாரித்து தருமாறு கேட்ட கணவன் - வெட்டிக் கொலை செய்த மனைவி; மட்டக்களப்பில் பரபரப்பு!

shanuja / Dec 15th 2025, 9:10 pm
image

காலை உணவாக பிட்டு தயாரித்து தருமாறு கோரிய கணவனை, மனைவி வெட்டி கொலை செய்த சம்பவம் ஒன்று இன்று (15) மட்டக்களப்பில்  பதிவாகியுள்ளது. 


மட்டக்களப்பு வாகனேரி விஷ்ணு கோவில் வீதியைச் சேர்ந்த 46 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 


குறித்த கணவர் வழமைபோல விவசாய நடவடிக்கைகளுக்காக நேற்று இரவு வீட்டை விட்டு வெளியேறி, இன்று காலையில் வீடு திரும்பியுள்ளார். 


இந்த நிலையில் மனைவியிடம் காலை உணவாக பிட்டு தயாரித்து தருமாறு கோரியுள்ளார். 

அதன்பின்னர் கணவனுக்கும், மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 


அது மோதலாக மாறிய நிலையில், முற்பகல் 11.30 மணியளவில் மனைவி, பிட்டு கேட்ட கணவனை ஆயுதமொன்றினால் தாக்கி கொலை செய்துள்ளார். 


இதையடுத்து குறித்த பெண் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சரணடைந்த நிலையில், அங்கு கணவனை தாம் கொலை செய்துள்ளதாக வாக்குமூலம் வழங்கியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சம்பவ இடத்திற்கு உடனடியாக தடயவியல் பிரிவு பொலிஸார் விரைந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். 


சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன் உடற்கூற்றுப்  பரிசோதனைகளுக்காக  வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பிட்டு தயாரித்து தருமாறு கேட்ட கணவன் - வெட்டிக் கொலை செய்த மனைவி; மட்டக்களப்பில் பரபரப்பு காலை உணவாக பிட்டு தயாரித்து தருமாறு கோரிய கணவனை, மனைவி வெட்டி கொலை செய்த சம்பவம் ஒன்று இன்று (15) மட்டக்களப்பில்  பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு வாகனேரி விஷ்ணு கோவில் வீதியைச் சேர்ந்த 46 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த கணவர் வழமைபோல விவசாய நடவடிக்கைகளுக்காக நேற்று இரவு வீட்டை விட்டு வெளியேறி, இன்று காலையில் வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் மனைவியிடம் காலை உணவாக பிட்டு தயாரித்து தருமாறு கோரியுள்ளார். அதன்பின்னர் கணவனுக்கும், மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அது மோதலாக மாறிய நிலையில், முற்பகல் 11.30 மணியளவில் மனைவி, பிட்டு கேட்ட கணவனை ஆயுதமொன்றினால் தாக்கி கொலை செய்துள்ளார். இதையடுத்து குறித்த பெண் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சரணடைந்த நிலையில், அங்கு கணவனை தாம் கொலை செய்துள்ளதாக வாக்குமூலம் வழங்கியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு உடனடியாக தடயவியல் பிரிவு பொலிஸார் விரைந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன் உடற்கூற்றுப்  பரிசோதனைகளுக்காக  வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement