ஈரானின் உச்சத் தலைவர் அலி காமெனெயின் மரணம் நாட்டிற்கு நம்பிக்கையை வழங்குகிறது என்று, இஸ்லாமியக் குடியரசை எதிர்க்கும் பிரான்சில் வசிக்கும் அவரது மருமகன் தெரிவித்துள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரும்பாலான ஈரானியர்களைப் போல நானும் மகிழ்ச்சியாக உள்ளேன் என்று காமெனெயின் சகோதரிகளில் ஒருவரின் மகனான மக்மூத் மொராத்கானி, வடக்கு பிரான்சிலுள்ள தனது இல்லத்திலிருந்து தொலைபேசி மூலம் இந்த கருத்தினை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அலி காமெனெயின் மரணத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன். இது ஒரு முன்னேற்றமான படி, ஒரு நம்பிக்கை என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.
அதே நேரம் கமேனி உயிரிழந்ததையடுத்து தற்போதைய ஆட்சி நீடிப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் அவர் கணித்துள்ளார்.
இறுதியில் அதிகாரத்தை மக்களிடம் ஒப்படைக்க வேண்டிய நிலை ஈரானில் ஏற்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது .
கமேனெயின் மரணத்தால் மகிழ்ச்சியடைந்துள்ளேன். மருமகனின் கருத்தால் பெரும் பரபரப்பு ஈரானின் உச்சத் தலைவர் அலி காமெனெயின் மரணம் நாட்டிற்கு நம்பிக்கையை வழங்குகிறது என்று, இஸ்லாமியக் குடியரசை எதிர்க்கும் பிரான்சில் வசிக்கும் அவரது மருமகன் தெரிவித்துள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பெரும்பாலான ஈரானியர்களைப் போல நானும் மகிழ்ச்சியாக உள்ளேன் என்று காமெனெயின் சகோதரிகளில் ஒருவரின் மகனான மக்மூத் மொராத்கானி, வடக்கு பிரான்சிலுள்ள தனது இல்லத்திலிருந்து தொலைபேசி மூலம் இந்த கருத்தினை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.அலி காமெனெயின் மரணத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன். இது ஒரு முன்னேற்றமான படி, ஒரு நம்பிக்கை என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார். அதே நேரம் கமேனி உயிரிழந்ததையடுத்து தற்போதைய ஆட்சி நீடிப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் அவர் கணித்துள்ளார்.இறுதியில் அதிகாரத்தை மக்களிடம் ஒப்படைக்க வேண்டிய நிலை ஈரானில் ஏற்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது .