• Nov 26 2024

சம்பள அதிகரிப்பால் நான் பதவி விலகப் போவதில்லை..! மத்திய வங்கி ஆளுநர் அதிரடி

Chithra / Mar 26th 2024, 12:47 pm
image

 

தனது ஊழியர்களின் சம்பள அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு பதவியில் இருந்து விலகப் போவதில்லை என மத்திய வங்கி ஆளுநர் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியில் இன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய வங்கியின் ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதன்படி எனக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களின் சம்பள உயர்வு, மறுபரிசீலனை போன்ற காரணங்களால் நான் வெளியேறமாட்டேன் என்பதை தெளிவாக சொல்ல வேண்டும்.

அத்துடன் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவது நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில் எனது பொறுப்பு நான் அதை செய்தேன். 

அதனால் நான் வெளியேறுவதற்கு இதை ஒரு காரணமாக பார்க்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்

இந்த முடிவு மூன்று ஆண்டுகளுக்கு கூட்டு ஒப்பந்தம் மூலம் தொழிற்சங்கங்களுடன் பேசி முடிவெடுக்கப்படுகிறது என்றும் வேறொருவருடன் சேர்ந்து விவாதிக்க வேண்டிய விஷயம் அல்ல. 

இது ஊழியர்களின் நலனுக்காக கூட்டாக எடுக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்

சம்பள அதிகரிப்பால் நான் பதவி விலகப் போவதில்லை. மத்திய வங்கி ஆளுநர் அதிரடி  தனது ஊழியர்களின் சம்பள அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு பதவியில் இருந்து விலகப் போவதில்லை என மத்திய வங்கி ஆளுநர் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.மத்திய வங்கியில் இன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய வங்கியின் ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அதன்படி எனக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களின் சம்பள உயர்வு, மறுபரிசீலனை போன்ற காரணங்களால் நான் வெளியேறமாட்டேன் என்பதை தெளிவாக சொல்ல வேண்டும்.அத்துடன் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவது நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில் எனது பொறுப்பு நான் அதை செய்தேன். அதனால் நான் வெளியேறுவதற்கு இதை ஒரு காரணமாக பார்க்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்இந்த முடிவு மூன்று ஆண்டுகளுக்கு கூட்டு ஒப்பந்தம் மூலம் தொழிற்சங்கங்களுடன் பேசி முடிவெடுக்கப்படுகிறது என்றும் வேறொருவருடன் சேர்ந்து விவாதிக்க வேண்டிய விஷயம் அல்ல. இது ஊழியர்களின் நலனுக்காக கூட்டாக எடுக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்

Advertisement

Advertisement

Advertisement