• Nov 24 2024

அமர்ந்திருந்தும் என்னால் மக்களுக்காக பணியாற்ற முடியும் - காமினி லொக்குகே சூளுரை

Chithra / Oct 13th 2024, 12:15 pm
image


இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தனது உடல் அனுமதிக்காத காரணத்தினால் தாம் போட்டியிடவில்லை என மூத்த அரசியல்வாதியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசியப் பட்டியலில் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவுடன் லொகுகேவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

உடல் குறைபாடுகள் இருந்தபோதிலும் தேசியப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது,  

அமர்ந்திருந்தும் தன்னால் பணியாற்ற முடியும் என காமினி லொக்குகே பதிலளித்தார்.

நாமல் ராஜபக்சவை தேசியப்பட்டியலில் சேர்ப்பதும் அவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பதும் கட்சியின் தீர்மானம் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

224 தொகுதிகளிலும் பணிகளை ஒழுங்கமைக்க ராஜபக்ச பொறுப்பு என்று லொகுகே குறிப்பிட்டார், 

மேலும் தான் போட்டியிடுவதற்குப் பதிலாக அந்தப் பொறுப்புகளில் கவனம் செலுத்துமாறு கட்சி உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர் என அவர் மேலும் கூறினார்.

அமர்ந்திருந்தும் என்னால் மக்களுக்காக பணியாற்ற முடியும் - காமினி லொக்குகே சூளுரை இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தனது உடல் அனுமதிக்காத காரணத்தினால் தாம் போட்டியிடவில்லை என மூத்த அரசியல்வாதியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசியப் பட்டியலில் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவுடன் லொகுகேவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.உடல் குறைபாடுகள் இருந்தபோதிலும் தேசியப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது,  அமர்ந்திருந்தும் தன்னால் பணியாற்ற முடியும் என காமினி லொக்குகே பதிலளித்தார்.நாமல் ராஜபக்சவை தேசியப்பட்டியலில் சேர்ப்பதும் அவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பதும் கட்சியின் தீர்மானம் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.224 தொகுதிகளிலும் பணிகளை ஒழுங்கமைக்க ராஜபக்ச பொறுப்பு என்று லொகுகே குறிப்பிட்டார், மேலும் தான் போட்டியிடுவதற்குப் பதிலாக அந்தப் பொறுப்புகளில் கவனம் செலுத்துமாறு கட்சி உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர் என அவர் மேலும் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement