• Apr 04 2025

காவேரி கலா மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நாடக பயிற்சி செயல் அமர்வு

Anaath / Oct 13th 2024, 12:03 pm
image

காவேரி கலா மன்றம் மற்றும் கற்பகம் இயற்கை நேய செயலணி இளையோர் நாடக குழு ஆகியவை இணைந்து, இரண்டு நாள் பயிற்சி செயல் அமர்வு ஒன்றை கடந்த 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் சங்கானை பொது நூலகத்தில் நடத்தினார்கள். இந்த நிகழ்வின் இறுதி அரங்கேற்றம் நேற்று சுழிபுரம் பெரியபுலோ அண்ணா கலையரங்கில் நடைபெற்றது.

நிகழ்வின்போது பறைஇசை ஆட்டம், களியலாட்டம், நாட்டார் பாடல்கள், உடன் நாடக அரங்கு என்பன நிகழ்த்தி மக்களை மகிழ்வூட்டினர். குறிப்பாக உடன் நாடக அரங்கினை நடித்தோர் பார்வையாளர்களின் பாராட்டினை வாரி குவித்தனர்.சர்வதேச கலை பரிமாற்று நிகழ்வு என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த கலைநிகழ்வை, தென் இந்தியாவில் இருந்து வருகை தந்த கலைஞர்கள் பயிற்றுவித்தமை குறிப்பிடத்தக்கது.



காவேரி கலா மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நாடக பயிற்சி செயல் அமர்வு காவேரி கலா மன்றம் மற்றும் கற்பகம் இயற்கை நேய செயலணி இளையோர் நாடக குழு ஆகியவை இணைந்து, இரண்டு நாள் பயிற்சி செயல் அமர்வு ஒன்றை கடந்த 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் சங்கானை பொது நூலகத்தில் நடத்தினார்கள். இந்த நிகழ்வின் இறுதி அரங்கேற்றம் நேற்று சுழிபுரம் பெரியபுலோ அண்ணா கலையரங்கில் நடைபெற்றது.நிகழ்வின்போது பறைஇசை ஆட்டம், களியலாட்டம், நாட்டார் பாடல்கள், உடன் நாடக அரங்கு என்பன நிகழ்த்தி மக்களை மகிழ்வூட்டினர். குறிப்பாக உடன் நாடக அரங்கினை நடித்தோர் பார்வையாளர்களின் பாராட்டினை வாரி குவித்தனர்.சர்வதேச கலை பரிமாற்று நிகழ்வு என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த கலைநிகழ்வை, தென் இந்தியாவில் இருந்து வருகை தந்த கலைஞர்கள் பயிற்றுவித்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement