உயிர்த்த ஞாயிறு தாக்குதல், நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் நிதி குற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக அரசாங்கம் மூன்று உயர்மட்ட குழுக்களை நியமிக்கவுள்ளது.
பொதுத்தேர்தலிற்கு முன்னதாக இந்த குழுக்களை அரசாங்கம் நியமிக்கவுள்ளது.
ஒழுக்காற்று அடிப்படையிலான ஆட்சி, ஊழல், வீண்விரயம் போன்றவற்றிற்கு தீர்வை காணுதல் போன்ற ஜனாதிபதியின் தேர்தல்கால வாக்குறுதிகளை அடிப்படையாக கொண்டு இந்த குழுக்களை அரசாங்கம் நியமிக்கவுள்ளதாக அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
உள்நாட்டு பொறிமுறை மூலமே பொறுப்புக்கூறலிற்கு தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ள அந்த வட்டாரங்கள் பொறுப்புக்கூறல் நல்லிணக்க விடயத்திற்கு தீர்வை காணக்கூடிய திறமையான நபர்கள் எங்களிடம் உள்ளனர் என அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இன்னமும் தீர்வு காணப்படாமல் உள்ள பொறுப்புக்கூறல் சம்பவங்களின் எண்ணிக்கையை அறிவதற்கான நடவடிக்கைகளை விசாரணை அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளனர் எனவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் நிதி குற்றங்கள் குறித்து ஆராய புதிய குழுக்கள் - அநுர அரசு திட்டம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் நிதி குற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக அரசாங்கம் மூன்று உயர்மட்ட குழுக்களை நியமிக்கவுள்ளது.பொதுத்தேர்தலிற்கு முன்னதாக இந்த குழுக்களை அரசாங்கம் நியமிக்கவுள்ளது.ஒழுக்காற்று அடிப்படையிலான ஆட்சி, ஊழல், வீண்விரயம் போன்றவற்றிற்கு தீர்வை காணுதல் போன்ற ஜனாதிபதியின் தேர்தல்கால வாக்குறுதிகளை அடிப்படையாக கொண்டு இந்த குழுக்களை அரசாங்கம் நியமிக்கவுள்ளதாக அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.உள்நாட்டு பொறிமுறை மூலமே பொறுப்புக்கூறலிற்கு தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ள அந்த வட்டாரங்கள் பொறுப்புக்கூறல் நல்லிணக்க விடயத்திற்கு தீர்வை காணக்கூடிய திறமையான நபர்கள் எங்களிடம் உள்ளனர் என அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இன்னமும் தீர்வு காணப்படாமல் உள்ள பொறுப்புக்கூறல் சம்பவங்களின் எண்ணிக்கையை அறிவதற்கான நடவடிக்கைகளை விசாரணை அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளனர் எனவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.