• Nov 16 2024

வலுவிழந்து இருக்கின்ற மக்களின் காவலனாக இருப்பேன்-தமிழரசு கட்சியின் வெற்றி வேட்பாளர் கோடீஸ்வரன் உறுதி..!

Sharmi / Nov 16th 2024, 1:06 pm
image

அம்பாறை மாவட்ட திகாமடுல்ல வாக்காளப் பெருமக்கள் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பல சவால்களுக்கு மத்தியில்  இலங்கை தமிழரசு கட்சி சார்பாக பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற பாடுபட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் தெரிவிப்பதுடன் வலுவிழந்து இருக்கின்ற மக்களின் காவலனாக இருப்பேன் என தமிழரசு கட்சியின் வெற்றி வேட்பாளர் கவிந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

மக்கள் பிரதிநிதியாக தெரிவாகிய  பின் காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் நேற்றையதினம்(15) இரவு வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

அம்பாறை மாவட்ட தமிழ் பாராளுமன்ற பிரதிநிதியாக இலங்கை தமிழசு கட்சி சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான என்னை தெரிவு செய்த மக்களுக்கு நன்றிகள்.

பாராளுமன்ற தேர்தலில்  பல சவால்களுக்கு மத்தியில்  இலங்கை தமிழரசு கட்சி சார்பாக பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு பெரும் பாடுபட்டுள்ளதை நான் அறிவேன்.

இந்தத் தேர்தல் பிரசாரத்துக்கு மக்கள் வழங்கிய பேராதரவுக்கு மிக்க நன்றிகள்.

எனவே வலுவிழந்து இருக்கின்ற மக்களின் காவலனாக தொடர்ந்தும் இருப்பேன் என குறிப்பிட்டார்.


வலுவிழந்து இருக்கின்ற மக்களின் காவலனாக இருப்பேன்-தமிழரசு கட்சியின் வெற்றி வேட்பாளர் கோடீஸ்வரன் உறுதி. அம்பாறை மாவட்ட திகாமடுல்ல வாக்காளப் பெருமக்கள் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பல சவால்களுக்கு மத்தியில்  இலங்கை தமிழரசு கட்சி சார்பாக பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற பாடுபட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் தெரிவிப்பதுடன் வலுவிழந்து இருக்கின்ற மக்களின் காவலனாக இருப்பேன் என தமிழரசு கட்சியின் வெற்றி வேட்பாளர் கவிந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.மக்கள் பிரதிநிதியாக தெரிவாகிய  பின் காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் நேற்றையதினம்(15) இரவு வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,அம்பாறை மாவட்ட தமிழ் பாராளுமன்ற பிரதிநிதியாக இலங்கை தமிழசு கட்சி சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான என்னை தெரிவு செய்த மக்களுக்கு நன்றிகள்.பாராளுமன்ற தேர்தலில்  பல சவால்களுக்கு மத்தியில்  இலங்கை தமிழரசு கட்சி சார்பாக பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு பெரும் பாடுபட்டுள்ளதை நான் அறிவேன்.இந்தத் தேர்தல் பிரசாரத்துக்கு மக்கள் வழங்கிய பேராதரவுக்கு மிக்க நன்றிகள்.எனவே வலுவிழந்து இருக்கின்ற மக்களின் காவலனாக தொடர்ந்தும் இருப்பேன் என குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement