• Sep 19 2024

மகிந்த ராஜபக்சவின் அரசியல் கொள்கைகளையே கடைப்பிடிப்பேன்! நாமல் சபதம்

Chithra / Sep 3rd 2024, 8:00 am
image

Advertisement

 

மகிந்த ராஜபக்சவின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை நான் கடைப்பிடிப்பேன். நாட்டின் ஒற்றையாட்சியைப் பாதுகாத்தே தீருவேன் என  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு நேற்று (02) கொழும்பு – ரத்னதீப நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச ,கோட்டாபய ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநர் பசில் ராஜபக்ச ,மற்றும் சமல் ராஜபக்ச ,உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் தெரிவிக்கையில்,

"ஐந்து சக்திகளை ஒன்றிணைத்து ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கொள்கை ரீதியில் மாறுப்பட்ட தரப்பினருடன் கூட்டணியமைத்ததால் எமது அணியினரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கிருந்தது. இதனால் தான் பசில் ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஸ்தாபித்தார்.

நாட்டின் ஒற்றையாட்சியைப் பாதுகாக்க நிபந்தனையில்லாமல் போரிட்டவர்களையும், பௌத்த சாசனத்தையும் பாதுகாக்க வேண்டியது எமது பிரதான கொள்கையாகும்.

பொருளாதார நெருக்கடிக்கு எம்மால் நிச்சயம் தீர்வு காண முடியும். பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் பொறுப்பு எனக்கும், எனது கட்சிக்கும் உண்டு. குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பொறுப்பற்ற வகையில் நாங்கள் செயற்படவில்லை.

30 வருடகால யுத்தத்தை நாங்களே முடிவுக்கு கொண்டு வந்தோம். சூழ்ச்சிகளினால் எம்மையும், எமது அணியையும் வீழ்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போது நாட்டுக்காக சிறந்த தீர்மானங்களை எடுத்தோம். நாட்டை முன்னேற்றும் ஆளுமை மற்றும் திறமை எம்மிடமுள்ளது.

எதிர்வரும் 10 ஆண்டுகளில் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியை இரண்டு மடங்காக அதிகரித்துக் கொள்ள வேண்டும். அதற்கான திட்டங்கள் எம்மிடம் உள்ளன.

மக்களால் தாங்கிக் கொள்ள கூடிய நியாயமான வரி கொள்கை நடைமுறைபடுத்தப்படும். நேர் வரிக்கு பதிலாக நேரில் வரி முறைமை நடைமுறைபடுத்தப்படும். என்றும் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் அரசியல் கொள்கைகளையே கடைப்பிடிப்பேன் நாமல் சபதம்  மகிந்த ராஜபக்சவின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை நான் கடைப்பிடிப்பேன். நாட்டின் ஒற்றையாட்சியைப் பாதுகாத்தே தீருவேன் என  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு நேற்று (02) கொழும்பு – ரத்னதீப நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்றது.இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச ,கோட்டாபய ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநர் பசில் ராஜபக்ச ,மற்றும் சமல் ராஜபக்ச ,உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.மேலும் தெரிவிக்கையில்,"ஐந்து சக்திகளை ஒன்றிணைத்து ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கொள்கை ரீதியில் மாறுப்பட்ட தரப்பினருடன் கூட்டணியமைத்ததால் எமது அணியினரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கிருந்தது. இதனால் தான் பசில் ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஸ்தாபித்தார்.நாட்டின் ஒற்றையாட்சியைப் பாதுகாக்க நிபந்தனையில்லாமல் போரிட்டவர்களையும், பௌத்த சாசனத்தையும் பாதுகாக்க வேண்டியது எமது பிரதான கொள்கையாகும்.பொருளாதார நெருக்கடிக்கு எம்மால் நிச்சயம் தீர்வு காண முடியும். பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் பொறுப்பு எனக்கும், எனது கட்சிக்கும் உண்டு. குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பொறுப்பற்ற வகையில் நாங்கள் செயற்படவில்லை.30 வருடகால யுத்தத்தை நாங்களே முடிவுக்கு கொண்டு வந்தோம். சூழ்ச்சிகளினால் எம்மையும், எமது அணியையும் வீழ்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போது நாட்டுக்காக சிறந்த தீர்மானங்களை எடுத்தோம். நாட்டை முன்னேற்றும் ஆளுமை மற்றும் திறமை எம்மிடமுள்ளது.எதிர்வரும் 10 ஆண்டுகளில் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியை இரண்டு மடங்காக அதிகரித்துக் கொள்ள வேண்டும். அதற்கான திட்டங்கள் எம்மிடம் உள்ளன.மக்களால் தாங்கிக் கொள்ள கூடிய நியாயமான வரி கொள்கை நடைமுறைபடுத்தப்படும். நேர் வரிக்கு பதிலாக நேரில் வரி முறைமை நடைமுறைபடுத்தப்படும். என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement