• May 17 2026

அரசியற் கட்சிகளுக்கு சார்பாக நடக்கமாட்டேன்...! நடுநிலைமையுடன் பணி தொடரும்..! மட்டு அரசாங்க அதிபர் திட்டவட்டம்...!samugammedia

Ziya / Dec 18th 2023, 1:44 pm
image

நான் எந்த அரசியல் கட்சிக்கு சார்பாகவும் நடக்கமாட்டேன், பக்கச்சார்பாகவும் செயற்படமாட்டேன் என புதிய அரசாங்க அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் தெரிவித்தார்.

இன்றையதினம் கடமைகளை பொறுப்பேற்று உரை நிகழ்த்தும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக திருமதி. ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் இன்று (18) திகதி தனது கடமைகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுள்ளார்.

இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்த புதிய அரசாங்க அதிபரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஸினி சிறிகாந்த் மற்றும் பிரதேச செயலாளர்கள், உத்தியோகத்தர்கள் வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து தனது அலுவலகத்தில் தனது கடமையினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதன்போது மத வழிபாடுகளும் முன்னெடுக்கப்பட்டதுடன் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



அரசியற் கட்சிகளுக்கு சார்பாக நடக்கமாட்டேன். நடுநிலைமையுடன் பணி தொடரும். மட்டு அரசாங்க அதிபர் திட்டவட்டம்.samugammedia நான் எந்த அரசியல் கட்சிக்கு சார்பாகவும் நடக்கமாட்டேன், பக்கச்சார்பாகவும் செயற்படமாட்டேன் என புதிய அரசாங்க அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் தெரிவித்தார்.இன்றையதினம் கடமைகளை பொறுப்பேற்று உரை நிகழ்த்தும் போதே அவர் இதனை தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக திருமதி. ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் இன்று (18) திகதி தனது கடமைகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுள்ளார்.இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்த புதிய அரசாங்க அதிபரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஸினி சிறிகாந்த் மற்றும் பிரதேச செயலாளர்கள், உத்தியோகத்தர்கள் வரவேற்றனர்.அதனை தொடர்ந்து தனது அலுவலகத்தில் தனது கடமையினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.இதன்போது மத வழிபாடுகளும் முன்னெடுக்கப்பட்டதுடன் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement