• Oct 06 2024

பணம் அச்சிடப்பட்டால் பொருட்களின் விலை மீண்டும் உயரும்! சம்பள அதிகரிப்பு தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Chithra / Jul 8th 2024, 12:56 pm
image

Advertisement

 

தற்போது அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுமாயின், அதிகரிக்கப்பட்ட தொகையை செலுத்துவதற்கு பணம் அச்சிடப்பட வேண்டும் என ஜனாதிபதியின் தொழில் உறவுகள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய  தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதன் படி, பணம் அச்சிடப்பட்டால் பொருட்களின் விலை மீண்டும் உயரும் என்றும், அதன் மூலம் சம்பளத்தை உயர்த்துவது பலனளிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள் பணம் அச்சிடப்பட வேண்டுமா அல்லது ஊதிய சம்பள உயர்வு செய்யப்பட வேண்டுமா என்பதை உறுதியாக கூற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  

இந்த நிலையில், சம்பள அதிகரிப்பு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து நாட்டில் 200 இற்கும் மேற்பட்ட  அரச சேவைகளின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பணம் அச்சிடப்பட்டால் பொருட்களின் விலை மீண்டும் உயரும் சம்பள அதிகரிப்பு தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை  தற்போது அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுமாயின், அதிகரிக்கப்பட்ட தொகையை செலுத்துவதற்கு பணம் அச்சிடப்பட வேண்டும் என ஜனாதிபதியின் தொழில் உறவுகள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய  தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.அதன் படி, பணம் அச்சிடப்பட்டால் பொருட்களின் விலை மீண்டும் உயரும் என்றும், அதன் மூலம் சம்பளத்தை உயர்த்துவது பலனளிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள் பணம் அச்சிடப்பட வேண்டுமா அல்லது ஊதிய சம்பள உயர்வு செய்யப்பட வேண்டுமா என்பதை உறுதியாக கூற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  இந்த நிலையில், சம்பள அதிகரிப்பு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து நாட்டில் 200 இற்கும் மேற்பட்ட  அரச சேவைகளின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement