• Apr 02 2025

அதுருகிரிய துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒருவர் பலி

Chithra / Jul 8th 2024, 12:52 pm
image


கொழும்பின் புறநகர் பகுதியான அத்துருகிரிய பகுதியில் நடாத்தப்பட்ட  துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது. 

இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று (08) முற்பகல் நடாத்தப்பட்டது.

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களில் பிரபல கோடிஸ்வரரும் கிளப் உரிமையாளருமான கிளப் வசந்தாவும் ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கி பிரயோகத்தில் பிரபல பாடகி சுஜீவா உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளதுடன்,

பாடகி சுஜீவா ஹோமாகம வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தவர்களை ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர்கள் வந்த வாகனம் என கூறப்படும் வாகனம் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

அதுருகிரிய துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒருவர் பலி கொழும்பின் புறநகர் பகுதியான அத்துருகிரிய பகுதியில் நடாத்தப்பட்ட  துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது. இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று (08) முற்பகல் நடாத்தப்பட்டது.துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களில் பிரபல கோடிஸ்வரரும் கிளப் உரிமையாளருமான கிளப் வசந்தாவும் ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த துப்பாக்கி பிரயோகத்தில் பிரபல பாடகி சுஜீவா உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளதுடன்,பாடகி சுஜீவா ஹோமாகம வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.மேலும் துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தவர்களை ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர்கள் வந்த வாகனம் என கூறப்படும் வாகனம் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அதன்படி சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement