• May 12 2025

ரணிலின் கட்டமைப்பினுள் வரவு-செலவுத் திட்டத்தை முன்வைக்கவிட்டால் நாடு மீண்டும் வீழ்ச்சி - எச்சரிக்கும் வஜிர

Chithra / Jan 8th 2025, 8:51 am
image

 

தற்போதைய ஜனாதிபதியினால் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டமானது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கட்டியெழுப்பப்பட்ட தேசியக் கொள்கைத் திட்ட வரம்புக்குள் இருந்தே முன்வைக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

காலியில் உலுவிட்டிகேவிலுள்ள கட்சி அலுவலகத்தில்  நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டெடுத்தார். முக்கியமான 92 சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் முன்வைத்தே அவர் அதனை செய்தார். 

அந்த சட்டங்களுக்கு அமையவே இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதனை தவிர வேறு முறைகள் கிடையாது.

ஏதேனும் முறையில் இந்த சட்டங்களுக்கு புறம்பாக வரவு செலவுத் திட்டங்களை முன்வைத்தால் நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்த நாடாகும் என்பதனை உறுதியாக கூற முடியும்.

ஏற்கனவே வரவு செலவுத் திட்டத்தை கொண்டு வருவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவே பார்க்கின்றோம். அதேபோன்று பொருளாதார மேம்பாட்டு சட்டம். 

இந்த சட்டத்தின் கீழே வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டி இருக்கிறது. 

ஊழல் எதிர்ப்பு சட்டம் தொடர்பான காரியாலயம் விரைவாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டி இருக்கிறது. 

திருடர்களை சட்டத்தின் வரைபுக்குள் சிக்கவைத்துக்கொள்ள தேவையான பணிகுழு நியமிக்கப்பட்டு குறித்த காரியாலயம் பலப்படுத்தப்பட வேண்டும். என்றார்.

ரணிலின் கட்டமைப்பினுள் வரவு-செலவுத் திட்டத்தை முன்வைக்கவிட்டால் நாடு மீண்டும் வீழ்ச்சி - எச்சரிக்கும் வஜிர  தற்போதைய ஜனாதிபதியினால் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டமானது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கட்டியெழுப்பப்பட்ட தேசியக் கொள்கைத் திட்ட வரம்புக்குள் இருந்தே முன்வைக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.காலியில் உலுவிட்டிகேவிலுள்ள கட்சி அலுவலகத்தில்  நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டெடுத்தார். முக்கியமான 92 சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் முன்வைத்தே அவர் அதனை செய்தார். அந்த சட்டங்களுக்கு அமையவே இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதனை தவிர வேறு முறைகள் கிடையாது.ஏதேனும் முறையில் இந்த சட்டங்களுக்கு புறம்பாக வரவு செலவுத் திட்டங்களை முன்வைத்தால் நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்த நாடாகும் என்பதனை உறுதியாக கூற முடியும்.ஏற்கனவே வரவு செலவுத் திட்டத்தை கொண்டு வருவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவே பார்க்கின்றோம். அதேபோன்று பொருளாதார மேம்பாட்டு சட்டம். இந்த சட்டத்தின் கீழே வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டி இருக்கிறது. ஊழல் எதிர்ப்பு சட்டம் தொடர்பான காரியாலயம் விரைவாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டி இருக்கிறது. திருடர்களை சட்டத்தின் வரைபுக்குள் சிக்கவைத்துக்கொள்ள தேவையான பணிகுழு நியமிக்கப்பட்டு குறித்த காரியாலயம் பலப்படுத்தப்பட வேண்டும். என்றார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now