நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் விலையை 150 ரூபாவாக உயர்த்தினால், அதற்கு இணையாக அரிசி விலையையும் அதிகரிப்பதற்கு நெல் ஆலை உரிமையாளர்கள் எதிர்பார்த்திருப்பதாக விவசாய அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (24) உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
விவசாயிகளிடமிருந்து அதிக விலைக்கு நெல்லைக் கொள்முதல் செய்வதில் தற்போது சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் நெல் கொள்முதல் செய்யும் விலையை அதிகரிப்பதா? அல்லது அவர்களுக்கு வேறு ஏதேனும் நிவாரணம் வழங்கும் முறையை உருவாக்குவதா? என்பது குறித்து சிக்கல் நிலவுகிறது.
நெல் விலையை 150 ரூபா வரை கொண்டு சென்றால், அரிசி விலையை அதிகரிக்க ஆலை உரிமையாளர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.அவ்வாறு நடந்தால் பொது நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படும். இப்படியொரு பிரச்சினை இங்கு உள்ளது.
எனினும், விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்திச் செலவுக்கு நிகரான விலையை வழங்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையிலேயே நாங்கள் செயற்பட்டு வருகிறோம். அதற்கமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டு நெல்லுக்கான கேள்வி 2.8 மில்லியன் மெற்றிக் தொன்னாக காணப்படுகின்ற நிலையில் 2.85 மில்லியன் மெற்றிக் தொன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தேசிய மட்டத்தில் போதுமான நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிலையில், வரையறுக்கப்பட்ட நிலையில் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே 2026ஆம் ஆண்டு அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அமைச்சர் லால் காந்த தெரிவித்தார்.
நெல் கொள்முதல் விலையை உயர்த்தினால் அரிசி விலையும் அதிகரிக்கும் - அமைச்சர் லால்காந்த எச்சரிக்கை நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் விலையை 150 ரூபாவாக உயர்த்தினால், அதற்கு இணையாக அரிசி விலையையும் அதிகரிப்பதற்கு நெல் ஆலை உரிமையாளர்கள் எதிர்பார்த்திருப்பதாக விவசாய அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று (24) உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.விவசாயிகளிடமிருந்து அதிக விலைக்கு நெல்லைக் கொள்முதல் செய்வதில் தற்போது சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் நெல் கொள்முதல் செய்யும் விலையை அதிகரிப்பதா அல்லது அவர்களுக்கு வேறு ஏதேனும் நிவாரணம் வழங்கும் முறையை உருவாக்குவதா என்பது குறித்து சிக்கல் நிலவுகிறது.நெல் விலையை 150 ரூபா வரை கொண்டு சென்றால், அரிசி விலையை அதிகரிக்க ஆலை உரிமையாளர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.அவ்வாறு நடந்தால் பொது நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படும். இப்படியொரு பிரச்சினை இங்கு உள்ளது.எனினும், விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்திச் செலவுக்கு நிகரான விலையை வழங்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையிலேயே நாங்கள் செயற்பட்டு வருகிறோம். அதற்கமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார். 2026ஆம் ஆண்டு நெல்லுக்கான கேள்வி 2.8 மில்லியன் மெற்றிக் தொன்னாக காணப்படுகின்ற நிலையில் 2.85 மில்லியன் மெற்றிக் தொன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தேசிய மட்டத்தில் போதுமான நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிலையில், வரையறுக்கப்பட்ட நிலையில் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே 2026ஆம் ஆண்டு அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அமைச்சர் லால் காந்த தெரிவித்தார்.