• Nov 23 2024

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்தால் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்...!விடுக்கப்பட்ட எச்சரிக்கை...!samugammedia

Sharmi / Jan 13th 2024, 2:29 pm
image

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையால் எமது தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனத்தின் செயலாளர் அ.செபராசா தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று(13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சில தினங்களுக்கு முன்னர் வடமராட்சி பகுதியில் 10க்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்களின் 70 இலட்சம் ரூபா பெறுமதியானமீன்பிடி வலைகள் அழிவடைந்துள்ளது.

தீவகப் பகுதிகளிலும் இந்திய இழுவைப் படகுகளால் எமது கடற்றொழிலாளர்களின் நண்டு வலைகள் முற்றாக அழிக்கப்பட்டு அறுத்துக் கொண்டு செல்லும் நடவடிக்கையும் இடம்பெறுகிறது.

இந்திய மீனவர்களின் படகுகளை கடற்படையினர் பிடித்தாலும் இவை தொடர்ச்சியாக இடம்பெறுகிறது.

இந்திய இழுவைப் படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறுவதை தடுக்க முடியாத அரசாங்கம் இங்கிருந்து செங்கடலுக்கு படைகளை அனுப்புகின்றனர்.

இந்திய மீனவர்களால் எமது வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதோடு எமது கடல் வளங்கள் அடியோடு அழிக்கப்படுகின்றது.

எனவே இலங்கை- இந்திய அரசாங்கங்கள் இணைந்து இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வினை வழங்க வேண்டும்.

அதேவேளை, இந்திய மீனவர்களால் எமக்கு ஏற்படும் பிரச்சினைகளை இங்குள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் நன்கு அறிவார்கள் எனவும் அவர்கள் இதில் தலையிட்டு இப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அவ்வாறு  தீர்வு வழங்காவிட்டால் இனிவரும் காலங்களில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு போராட வேண்டிய நிலை ஏற்படும்.

அதேவேளை எமது கடற்றொழில் அமைச்சர் தமிழராக இருந்தும் இதுவரையில் எமக்கு தீர்வை வழங்காதது மிகவும் கவலை தருகின்றது.

இந்திய இழுவைப் படகால் பாதிக்கப்பட்ட எமது கடற்றொழிலாளர்களுக்கு அரசாங்கம்  நிவாரணங்களை பெற்றுத்தர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்தால் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.விடுக்கப்பட்ட எச்சரிக்கை.samugammedia இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையால் எமது தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனத்தின் செயலாளர் அ.செபராசா தெரிவித்துள்ளார்.யாழில் இன்று(13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,சில தினங்களுக்கு முன்னர் வடமராட்சி பகுதியில் 10க்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்களின் 70 இலட்சம் ரூபா பெறுமதியானமீன்பிடி வலைகள் அழிவடைந்துள்ளது.தீவகப் பகுதிகளிலும் இந்திய இழுவைப் படகுகளால் எமது கடற்றொழிலாளர்களின் நண்டு வலைகள் முற்றாக அழிக்கப்பட்டு அறுத்துக் கொண்டு செல்லும் நடவடிக்கையும் இடம்பெறுகிறது.இந்திய மீனவர்களின் படகுகளை கடற்படையினர் பிடித்தாலும் இவை தொடர்ச்சியாக இடம்பெறுகிறது.இந்திய இழுவைப் படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறுவதை தடுக்க முடியாத அரசாங்கம் இங்கிருந்து செங்கடலுக்கு படைகளை அனுப்புகின்றனர்.இந்திய மீனவர்களால் எமது வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதோடு எமது கடல் வளங்கள் அடியோடு அழிக்கப்படுகின்றது.எனவே இலங்கை- இந்திய அரசாங்கங்கள் இணைந்து இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வினை வழங்க வேண்டும்.அதேவேளை, இந்திய மீனவர்களால் எமக்கு ஏற்படும் பிரச்சினைகளை இங்குள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் நன்கு அறிவார்கள் எனவும் அவர்கள் இதில் தலையிட்டு இப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.அவ்வாறு  தீர்வு வழங்காவிட்டால் இனிவரும் காலங்களில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு போராட வேண்டிய நிலை ஏற்படும்.அதேவேளை எமது கடற்றொழில் அமைச்சர் தமிழராக இருந்தும் இதுவரையில் எமக்கு தீர்வை வழங்காதது மிகவும் கவலை தருகின்றது.இந்திய இழுவைப் படகால் பாதிக்கப்பட்ட எமது கடற்றொழிலாளர்களுக்கு அரசாங்கம்  நிவாரணங்களை பெற்றுத்தர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement