• Sep 14 2024

பிழையான தீர்மானம் எடுத்தால் பங்களாதேஷிற்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும்! - அகிலவிராஜ் எச்சரிக்கை

Chithra / Aug 29th 2024, 11:43 am
image

Advertisement

 

மக்கள் பிழையான தீர்மானம் எடுத்தால் பங்களாதேஷிற்கு ஏற்பட்டுள்ள நிலையே எமக்கும் ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்தால் நாடு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என நாங்கள் அன்று மக்களுக்கு தெளிவுபடுத்தினோம். 

என்றாலும் மக்கள் எங்களை நம்பாததால் பாரிய நெருக்கடிக்கு  முகம்கொடுக்க நேரிட்டது.

அதேபோன்று தற்போதும் ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு யாருக்கு வாக்களித்தாலும் மீண்டும் சில மாதங்களில் நாட்டை கட்டியெழுப்ப ரணில் விக்ரமசிங்க முன்வரவேண்டி வரும்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமான தலைவரை தெரிவு செய்வதா? அல்லது புதிய ஒருவரை தெரிவுசெய்து பரீட்சித்துப்பார்ப்பதா? என்பது மக்களின் தீர்மானத்திலேயே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிழையான தீர்மானம் எடுத்தால் பங்களாதேஷிற்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும் - அகிலவிராஜ் எச்சரிக்கை  மக்கள் பிழையான தீர்மானம் எடுத்தால் பங்களாதேஷிற்கு ஏற்பட்டுள்ள நிலையே எமக்கும் ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.முன்னதாக கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்தால் நாடு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என நாங்கள் அன்று மக்களுக்கு தெளிவுபடுத்தினோம். என்றாலும் மக்கள் எங்களை நம்பாததால் பாரிய நெருக்கடிக்கு  முகம்கொடுக்க நேரிட்டது.அதேபோன்று தற்போதும் ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு யாருக்கு வாக்களித்தாலும் மீண்டும் சில மாதங்களில் நாட்டை கட்டியெழுப்ப ரணில் விக்ரமசிங்க முன்வரவேண்டி வரும்.நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமான தலைவரை தெரிவு செய்வதா அல்லது புதிய ஒருவரை தெரிவுசெய்து பரீட்சித்துப்பார்ப்பதா என்பது மக்களின் தீர்மானத்திலேயே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement