• Sep 14 2024

கட்சி தாவி மக்கள் காங்கிரஸுடன் இணைந்து கொண்ட எஸ்.எம். சபீஸ்..!

Sharmi / Aug 29th 2024, 11:30 am
image

Advertisement

அக்கரைப்பற்றில் கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக உள்ளூராட்சி சபை உறுப்பினராகவும், அக்கரைப்பற்று பெரியபள்ளிவாசல் மற்றும் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயம் அமைப்பின் தற்போதைய தலைவருமான எஸ்.எம்.சபீஸ், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்து கொண்டார்.

கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.அமீர் அலி மற்றும் கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் முன்னிலையில், அவர் மக்கள் காங்கிரஸுடன்  இணைந்துகொண்டார்.

கட்சியை பலப்படுத்தவும் அதனூடாக தனது அரசியல் நகர்வுகளை முன்கொணர்ந்து, மக்களினதும் சமூகத்தினதும் நலன்களை மேலோங்கச் செய்யவும் தலைவர் ரிஷாட் பதியுதீனுடன் கைகோர்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 


கட்சி தாவி மக்கள் காங்கிரஸுடன் இணைந்து கொண்ட எஸ்.எம். சபீஸ். அக்கரைப்பற்றில் கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக உள்ளூராட்சி சபை உறுப்பினராகவும், அக்கரைப்பற்று பெரியபள்ளிவாசல் மற்றும் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயம் அமைப்பின் தற்போதைய தலைவருமான எஸ்.எம்.சபீஸ், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்து கொண்டார்.கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.அமீர் அலி மற்றும் கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் முன்னிலையில், அவர் மக்கள் காங்கிரஸுடன்  இணைந்துகொண்டார்.கட்சியை பலப்படுத்தவும் அதனூடாக தனது அரசியல் நகர்வுகளை முன்கொணர்ந்து, மக்களினதும் சமூகத்தினதும் நலன்களை மேலோங்கச் செய்யவும் தலைவர் ரிஷாட் பதியுதீனுடன் கைகோர்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement