• Nov 25 2024

தமிழ் தேசியத்திற்கான பயணம் தொடரும்! தமிழரசு கட்சியின் புதிய தலைவர் சிறீதரன் உறுதி

Chithra / Jan 21st 2024, 4:50 pm
image

இலங்கை தமிழரசு கட்சியினுடைய வரலாற்றிலே ஒரு ஜனநாயக ரீதியான உரையாடல் ஊடாகவும் ஜனநாயக ரீதியான செயல்முறையின் ஊடாகவும் முக்கிய வரலாற்றை பதித்துள்ளதாக தமிழரசு கட்சியின் புதிய தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் இன்று (21) திருகோணமலையில் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் குறித்த தேர்தலில் வெற்றி பெற்ற பின் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 

என்னை தெரிவு செய்வதற்கு காரணமாக இருந்த இயற்கை என்னும் இறைவனுக்கும்,

எனக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அயராது உழைத்த அந்த பொதுசபை உறுப்பினர்களின் மிகப் பெறுமதியான வாக்குகளால் தவைவராக தெரிவு செய்ததற்கு முதலில் எனது நன்றிகள்.

இன்று இது பலபேருக்கு பல நம்பிக்கைகளை தந்திருக்கின்றது. பல இளைஞர் யுவதிகள் கட்சி பற்றிய அதிகமான அக்கறை கொள்ளவைத்துள்ளது.

அத்துடன் தன்னுடன் போட்டியிட்ட சுமந்திரன் மற்றும் யோகேஸ்வரனுடன் இணைந்து கட்சியுடைய செயற்பாட்டினை இன்னும் பல வழிகளில் தேசியத்தின் ஒவ்வொரு அங்குலத்துக்காகவும் தொடர்ந்து பொறுப்போடும் கடமையுடனும் செயற்படுவோம் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

அந்த கடமையை சரியாக செய்வோம். அதற்காக பல தடவை பல ஊடகங்கள் ஊடாக எங்களுடைய ஒற்றுமையையும் பலத்தையும் தெளிவுபடுத்தியிருந்தோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் தேசியத்திற்கான பயணம் தொடரும் தமிழரசு கட்சியின் புதிய தலைவர் சிறீதரன் உறுதி இலங்கை தமிழரசு கட்சியினுடைய வரலாற்றிலே ஒரு ஜனநாயக ரீதியான உரையாடல் ஊடாகவும் ஜனநாயக ரீதியான செயல்முறையின் ஊடாகவும் முக்கிய வரலாற்றை பதித்துள்ளதாக தமிழரசு கட்சியின் புதிய தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் இன்று (21) திருகோணமலையில் இடம்பெற்றிருந்தது.இந்த நிலையில் குறித்த தேர்தலில் வெற்றி பெற்ற பின் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், என்னை தெரிவு செய்வதற்கு காரணமாக இருந்த இயற்கை என்னும் இறைவனுக்கும்,எனக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அயராது உழைத்த அந்த பொதுசபை உறுப்பினர்களின் மிகப் பெறுமதியான வாக்குகளால் தவைவராக தெரிவு செய்ததற்கு முதலில் எனது நன்றிகள்.இன்று இது பலபேருக்கு பல நம்பிக்கைகளை தந்திருக்கின்றது. பல இளைஞர் யுவதிகள் கட்சி பற்றிய அதிகமான அக்கறை கொள்ளவைத்துள்ளது.அத்துடன் தன்னுடன் போட்டியிட்ட சுமந்திரன் மற்றும் யோகேஸ்வரனுடன் இணைந்து கட்சியுடைய செயற்பாட்டினை இன்னும் பல வழிகளில் தேசியத்தின் ஒவ்வொரு அங்குலத்துக்காகவும் தொடர்ந்து பொறுப்போடும் கடமையுடனும் செயற்படுவோம் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.அந்த கடமையை சரியாக செய்வோம். அதற்காக பல தடவை பல ஊடகங்கள் ஊடாக எங்களுடைய ஒற்றுமையையும் பலத்தையும் தெளிவுபடுத்தியிருந்தோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement