• Nov 26 2024

இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கான புதிய திகதி அறிவிப்பு..! மகிழ்ச்சியில் இலங்கை ரசிகர்கள்

Chithra / Feb 2nd 2024, 7:26 am
image

 

கால வரையறையின்றி பிற்போடப்பட்டிருந்த, இசைஞானி இளையராஜாவின் கொழும்பு இசை நிகழ்ச்சி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20, மற்றும் 21ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளது.

நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் இந்த புதிய திகதிகளை தீர்மானித்து அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சிக்காக முற்பதிவு செய்யப்பட்ட அதே அனுமதி சீட்டுகளை ஏப்ரல் மாதம் 20 மற்றும் 21 ஆகிய மாற்றுத்திகதிகளில் பயன்படுத்தலாம் எனவும் ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, ஜனவரி மாதம் 27 ஆம் திகதி முற்பதிவு செய்தவர்கள் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமையன்றும், ஜனவரி மாதம் 28 ஆம் திகதி முற்பதிவு செய்தவர்கள் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்றும் இசை நிகழ்ச்சியை கேட்டும் பார்த்தும் மகிழலாம் என ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இளையராஜாவின் மகள் பாடகி பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 26 ஆம் திகதி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.

இதனையடுத்து, மேற்கூறிய தினங்களில் நடைபெறவிருந்த இசைநிகழ்ச்சி காலவரையறையின்றி பிற்போடப்பட்டு,  ஏட்பாட்டுக்குழுவினரால் புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இளையராஜாவின் மகள் பவதாரணியின் மறைவின் காரணமாக இசைநிகழ்ச்சி பிற்போடப்பட்டதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்ததுடன், யாரும் எதிர்பாராமல் நிகழ்ந்த பவதாரணியின் மரணத்தினால் அதிர்ச்சியையும் சோகத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் இலங்கையின் இசை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரு விடயமாக ஏற்பாட்டுக்குழுவின் தற்போதைய அறிவிப்பு மாறியுள்ளது.


இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கான புதிய திகதி அறிவிப்பு. மகிழ்ச்சியில் இலங்கை ரசிகர்கள்  கால வரையறையின்றி பிற்போடப்பட்டிருந்த, இசைஞானி இளையராஜாவின் கொழும்பு இசை நிகழ்ச்சி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20, மற்றும் 21ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளது.நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் இந்த புதிய திகதிகளை தீர்மானித்து அறிவித்துள்ளனர்.இந்நிலையில், ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சிக்காக முற்பதிவு செய்யப்பட்ட அதே அனுமதி சீட்டுகளை ஏப்ரல் மாதம் 20 மற்றும் 21 ஆகிய மாற்றுத்திகதிகளில் பயன்படுத்தலாம் எனவும் ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.இதன்படி, ஜனவரி மாதம் 27 ஆம் திகதி முற்பதிவு செய்தவர்கள் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமையன்றும், ஜனவரி மாதம் 28 ஆம் திகதி முற்பதிவு செய்தவர்கள் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்றும் இசை நிகழ்ச்சியை கேட்டும் பார்த்தும் மகிழலாம் என ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இளையராஜாவின் மகள் பாடகி பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 26 ஆம் திகதி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.இதனையடுத்து, மேற்கூறிய தினங்களில் நடைபெறவிருந்த இசைநிகழ்ச்சி காலவரையறையின்றி பிற்போடப்பட்டு,  ஏட்பாட்டுக்குழுவினரால் புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும், இளையராஜாவின் மகள் பவதாரணியின் மறைவின் காரணமாக இசைநிகழ்ச்சி பிற்போடப்பட்டதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்ததுடன், யாரும் எதிர்பாராமல் நிகழ்ந்த பவதாரணியின் மரணத்தினால் அதிர்ச்சியையும் சோகத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர்.இந்நிலையில் இலங்கையின் இசை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரு விடயமாக ஏற்பாட்டுக்குழுவின் தற்போதைய அறிவிப்பு மாறியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement