• May 27 2025

லொறியில் சிக்கி நபரொருவர் பலி! சாரதி தலைமறைவு

Chithra / May 26th 2025, 10:23 am
image

        

கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெமில்தன் தேயிலைத் தோட்ட வீதியில் லொறியொன்றில் சிக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (25) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய லொறி சாரதி அங்கிருந்து தலைமறைவாகி உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த நபர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் 33 வயதுடைய வெவன்டன்வத்த, தவலன்தென்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவருகிறது.

சடலம் நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


லொறியில் சிக்கி நபரொருவர் பலி சாரதி தலைமறைவு         கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெமில்தன் தேயிலைத் தோட்ட வீதியில் லொறியொன்றில் சிக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து நேற்று (25) இரவு இடம்பெற்றுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய லொறி சாரதி அங்கிருந்து தலைமறைவாகி உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த நபர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் உயிரிழந்த நபர் 33 வயதுடைய வெவன்டன்வத்த, தவலன்தென்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவருகிறது.சடலம் நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement