• May 27 2025

விடுதியில் உயிரைமாய்த்த மாணவி; சக மாணவர்களால் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்

Chithra / May 26th 2025, 7:54 am
image


வயம்ப தேசிய கல்வியியற் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் கல்லூரி விடுதியில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த மாணவி வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியின் விஞ்ஞான பீடத்தில் 

கல்வி கற்ற கண்டி தெனியாய பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரகமுவ பல்கலைக்கழக மாணவனின் தற்கொலை சம்பவம் இன்னும் தணிவதற்கு முன்பே 

மற்றுமொரு தற்கொலைச் சம்பவம் மேலும் சோகமாக்கியுள்ளது.

உயிரிழந்த மாணவி குறித்து தோழிகள் கூறியதாவது, 

கல்லூரியில் சில விரிவுரையாளர்களின் துன்புறுத்தலால் ஏற்பட்ட மன உளைச்சலை எதிர்கொள்ள முடியாமல் தான் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில், வயம்ப கல்வியியல் பல்கலைக்கழக மாணவர்களும் நேற்று முன்தினம் மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்,

இதுபோன்ற மரணங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சஞ்சீவனி இரண்டு வருடங்களுக்கு முன்பு கண்டியின் தெல்தெனிய பகுதியிலிருந்து வயம்ப தேசிய கல்விக் கல்லூரிக்கு வந்துள்ளார்.

ஆனால் தனது கல்வி காலத்தை நிறைவு செய்வதற்குள், அவர் இவ்வாறு தவறான முடிவை நோக்கிச் சென்றுள்ளார்.

 சம்பவம் குறித்து கல்வி அமைச்சு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 


விடுதியில் உயிரைமாய்த்த மாணவி; சக மாணவர்களால் வெளிவந்த அதிர்ச்சித் தகவல் வயம்ப தேசிய கல்வியியற் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் கல்லூரி விடுதியில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.இவ்வாறு உயிரிழந்த மாணவி வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியின் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்ற கண்டி தெனியாய பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சபரகமுவ பல்கலைக்கழக மாணவனின் தற்கொலை சம்பவம் இன்னும் தணிவதற்கு முன்பே மற்றுமொரு தற்கொலைச் சம்பவம் மேலும் சோகமாக்கியுள்ளது.உயிரிழந்த மாணவி குறித்து தோழிகள் கூறியதாவது, கல்லூரியில் சில விரிவுரையாளர்களின் துன்புறுத்தலால் ஏற்பட்ட மன உளைச்சலை எதிர்கொள்ள முடியாமல் தான் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பில், வயம்ப கல்வியியல் பல்கலைக்கழக மாணவர்களும் நேற்று முன்தினம் மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்,இதுபோன்ற மரணங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.சஞ்சீவனி இரண்டு வருடங்களுக்கு முன்பு கண்டியின் தெல்தெனிய பகுதியிலிருந்து வயம்ப தேசிய கல்விக் கல்லூரிக்கு வந்துள்ளார்.ஆனால் தனது கல்வி காலத்தை நிறைவு செய்வதற்குள், அவர் இவ்வாறு தவறான முடிவை நோக்கிச் சென்றுள்ளார். சம்பவம் குறித்து கல்வி அமைச்சு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement