• Jan 08 2025

வாகநேரியில் நோய்வாய்ப்பட்ட : 6 வயது மதிக்கத்தக்க காட்டு யானைக் குட்டி

Tharmini / Dec 29th 2024, 7:57 pm
image

மட்டக்களப்பு காவத்தமுனை வாகநேரி வயல்வெளி பிரதேசத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையில் 6 வயது மதிக்கத்தக்க காட்டு யானைக் குட்டி ஒன்று இன்று (29) விழுந்து காணப்படுகிறது.

நடக்க முடியாத நிலையில காணப்படும் யானைக் குட்டி தொடர்பாக உள்ளுர் விவசாயிகளினால் கிரான் பிரதேச வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் அறிவிக்கப்பட்டதனை தொடர்ந்து அவர்கள்

சம்பவ இடத்திற்கு வருகை தந்து சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வாரம் முதல் குறித்த வயல் பிரதேசத்தில் தனிமையில் அலைந்து திரிந்த இவ் யானையானது உடல் மெலிந்து உணவு உற்கொள்ள முடியாத நிலையில் பலவீனமுற்ற நிலையில் காணப்பட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை காவத்தமுனை,மஜ்மா நகர் மற்றும் நாவலடி ஆகிய பிரதேசங்களில் யானைகளின் அட்டகாசம் தொடர்சியாக காணப்படுவதாகவும் அவற்றில் இருந்து தங்களை பாதுகாப்பதற்கு யானை வேலிகளை அமைத்து தருமாறு பிரதேச வாசிகள் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.



வாகநேரியில் நோய்வாய்ப்பட்ட : 6 வயது மதிக்கத்தக்க காட்டு யானைக் குட்டி மட்டக்களப்பு காவத்தமுனை வாகநேரி வயல்வெளி பிரதேசத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையில் 6 வயது மதிக்கத்தக்க காட்டு யானைக் குட்டி ஒன்று இன்று (29) விழுந்து காணப்படுகிறது.நடக்க முடியாத நிலையில காணப்படும் யானைக் குட்டி தொடர்பாக உள்ளுர் விவசாயிகளினால் கிரான் பிரதேச வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் அறிவிக்கப்பட்டதனை தொடர்ந்து அவர்கள்சம்பவ இடத்திற்கு வருகை தந்து சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த வாரம் முதல் குறித்த வயல் பிரதேசத்தில் தனிமையில் அலைந்து திரிந்த இவ் யானையானது உடல் மெலிந்து உணவு உற்கொள்ள முடியாத நிலையில் பலவீனமுற்ற நிலையில் காணப்பட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இதேவேளை காவத்தமுனை,மஜ்மா நகர் மற்றும் நாவலடி ஆகிய பிரதேசங்களில் யானைகளின் அட்டகாசம் தொடர்சியாக காணப்படுவதாகவும் அவற்றில் இருந்து தங்களை பாதுகாப்பதற்கு யானை வேலிகளை அமைத்து தருமாறு பிரதேச வாசிகள் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement