• Jan 11 2025

சுண்ணாம்புக்கல் அகழ்வில் சட்டவிரோத செயற்பாடுகள் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் -பொ. ஐங்கரநேசன் கோரிக்கை!

Chithra / Jan 9th 2025, 3:01 pm
image


யாழ்ப்பாணக் குடாநாடு கடலாலும், கடல் நீரேரிகளாலும் சூழப்பட்ட ஒரு தீபகற்பம். பூமி வெப்பமடைவதன் விளைவாக ஏற்பட்டுவரும் கடல்மட்ட உயர்வு குடாநாட்டைப் பெருமளவு பாதிக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கட்டுப்பாடற்ற சட்டவிரோத சுண்ணாம்பு அகழ்வு காலநிலை மாற்றத்தால் ஏற்படவுள்ள பாதகங்களை மேலும் விரைவுபடுத்தும், அதிகப்படுத்தும். இவற்றைக் கருத்திற்கொண்டு விவசாய நடவடிக்கையைப் பாதிக்காத வகையில் சுண்ணாம்புக்கல் அகழ்வை நெறிப்படுத்துவதோடு, இதில் நிலவக்கூடிய சட்டவிரோதச் செயற்பாடுகள் அனைத்தும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளார். 

வடமாகாண ஆளுநரிடம் சட்டவிரோத சுண்ணக்கல் அகழ்வை முடிவுறுத்தக்கோரி பொ.ஐங்கரநேசன் இன்று வியாழக்கிழமை (09.01.2024) மனுவொன்றைச் சமர்ப்பித்த பின்னர் நிகழ்த்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையில் சுண்ணாம்புக்கல் வடமேற்கு மாகாணத்திலும், வடக்கு மாகாணத்திலும் கரையோரத்தை அண்டிக் காணப்படும் ஒரு இயற்கை வளமாகும். புவிச்சரித வரலாற்றில் பல மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட மயோசின் காலத்தில் கடலின் அடித்தளப் படிவுகளாகத் தோற்றம்பெற்ற இப்பாறைகள் சீமெந்து தயாரிப்பிலும், இதர கட்டுமானங்களிலும் பிரதான மூலப் பொருளாக விளங்குகின்றது. கூடவே, சூழலியல் ரீதியாகக் கடல் நீர் நிலத்தடி நீருடன் கலப்பதைத் தடைசெய்வதிலும், நிலத்தடி நீரோட்டத்திலும் மிகவும் இன்றியமையாத பங்களிப்பையும் வழங்கி வருகிறது. 

சமீப நாட்களாகச் சுண்ணாம்புக்கல் அகழ்வும் அதனை வேறு மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்வதும் பெரும் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது. சுண்ணாம்புக்கல் அகழ்வு பயிர்ச் செய்கைக்காக இரண்டடி ஆழம் வரையில் கிளறி எடுத்தல் என்ற நிலையில் இருந்து, இன்று சீமெந்து தயாரிப்புக்காகக் கனரக வாகனங்களைக் கொண்டு அகழ்ந்தெடுத்தல் என்ற நிலைக்கு மாறியுள்ளது.

குறிப்பாக, தென்மராட்சி சரசாலையில் அனுமதியின்றிச் சட்டவிரோதமாக அரச காணிகளிலும், தனியார் காணிகளிலும் பாரிய அளவில் சுண்ணாம்புக்கல் அகழ்வு இரவு நேரங்களில் இடம்பெற்று வருகிறது. காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை இயக்கப்படாதிருப்பதற்குச் சுண்ணாம்புக் கல்லைப் பெறுவதில் உள்ள இடர்பாடுகளே காரணம். 

கீரிமலையில் சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஏற்பட்ட பிரமாண்ட குழிகள் இன்னமும் மூடப்படாத நிலையில் இனிமேலும் அகழ்வைத் தொடர்வது சூழல் ரீதியாகப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் கிளிங்கர்களை எடுத்துவந்து, சீமெந்துத் தொழிற்சாலையை மீள இயக்க முடியும் என்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இங்கிருந்து வேறு மாவட்டங்களுக்குச் சுண்ணாம்புக்கல்லை எடுத்துச்செல்வது மக்களிடையே கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நொறுக்கப்பட்ட சுண்ணாம்புக்கற்களை அரைத் தயாரிப்பாகவோ அல்லது முடிக்கப்பட்ட தயாரிப்புகளாகவோ கருதமுடியாது என்பதால் இதனை எடுத்துச் செல்வதற்குப் போக்குவரத்து உரிமம் அவசியம் எனப் புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகம் யாழ். மாவட்டச் செயலருக்குத் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் இருந்து சுண்ணாம்புக்கல் வெளிமாட்டங்களுக்குத் தங்கு தடையில்லாமல் எடுத்துச் செல்லப்படுகிறது. ஆளுநர் உடனடியாக சுண்ணக்கல் அகழ்வில் நிலவும் சட்டவிரோத செயற்பாடுகளைக் களைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சுண்ணாம்புக்கல் அகழ்வில் சட்டவிரோத செயற்பாடுகள் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் -பொ. ஐங்கரநேசன் கோரிக்கை யாழ்ப்பாணக் குடாநாடு கடலாலும், கடல் நீரேரிகளாலும் சூழப்பட்ட ஒரு தீபகற்பம். பூமி வெப்பமடைவதன் விளைவாக ஏற்பட்டுவரும் கடல்மட்ட உயர்வு குடாநாட்டைப் பெருமளவு பாதிக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், கட்டுப்பாடற்ற சட்டவிரோத சுண்ணாம்பு அகழ்வு காலநிலை மாற்றத்தால் ஏற்படவுள்ள பாதகங்களை மேலும் விரைவுபடுத்தும், அதிகப்படுத்தும். இவற்றைக் கருத்திற்கொண்டு விவசாய நடவடிக்கையைப் பாதிக்காத வகையில் சுண்ணாம்புக்கல் அகழ்வை நெறிப்படுத்துவதோடு, இதில் நிலவக்கூடிய சட்டவிரோதச் செயற்பாடுகள் அனைத்தும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளார். வடமாகாண ஆளுநரிடம் சட்டவிரோத சுண்ணக்கல் அகழ்வை முடிவுறுத்தக்கோரி பொ.ஐங்கரநேசன் இன்று வியாழக்கிழமை (09.01.2024) மனுவொன்றைச் சமர்ப்பித்த பின்னர் நிகழ்த்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,இலங்கையில் சுண்ணாம்புக்கல் வடமேற்கு மாகாணத்திலும், வடக்கு மாகாணத்திலும் கரையோரத்தை அண்டிக் காணப்படும் ஒரு இயற்கை வளமாகும். புவிச்சரித வரலாற்றில் பல மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட மயோசின் காலத்தில் கடலின் அடித்தளப் படிவுகளாகத் தோற்றம்பெற்ற இப்பாறைகள் சீமெந்து தயாரிப்பிலும், இதர கட்டுமானங்களிலும் பிரதான மூலப் பொருளாக விளங்குகின்றது. கூடவே, சூழலியல் ரீதியாகக் கடல் நீர் நிலத்தடி நீருடன் கலப்பதைத் தடைசெய்வதிலும், நிலத்தடி நீரோட்டத்திலும் மிகவும் இன்றியமையாத பங்களிப்பையும் வழங்கி வருகிறது. சமீப நாட்களாகச் சுண்ணாம்புக்கல் அகழ்வும் அதனை வேறு மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்வதும் பெரும் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது. சுண்ணாம்புக்கல் அகழ்வு பயிர்ச் செய்கைக்காக இரண்டடி ஆழம் வரையில் கிளறி எடுத்தல் என்ற நிலையில் இருந்து, இன்று சீமெந்து தயாரிப்புக்காகக் கனரக வாகனங்களைக் கொண்டு அகழ்ந்தெடுத்தல் என்ற நிலைக்கு மாறியுள்ளது.குறிப்பாக, தென்மராட்சி சரசாலையில் அனுமதியின்றிச் சட்டவிரோதமாக அரச காணிகளிலும், தனியார் காணிகளிலும் பாரிய அளவில் சுண்ணாம்புக்கல் அகழ்வு இரவு நேரங்களில் இடம்பெற்று வருகிறது. காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை இயக்கப்படாதிருப்பதற்குச் சுண்ணாம்புக் கல்லைப் பெறுவதில் உள்ள இடர்பாடுகளே காரணம். கீரிமலையில் சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஏற்பட்ட பிரமாண்ட குழிகள் இன்னமும் மூடப்படாத நிலையில் இனிமேலும் அகழ்வைத் தொடர்வது சூழல் ரீதியாகப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் கிளிங்கர்களை எடுத்துவந்து, சீமெந்துத் தொழிற்சாலையை மீள இயக்க முடியும் என்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது.இந்நிலையில் இங்கிருந்து வேறு மாவட்டங்களுக்குச் சுண்ணாம்புக்கல்லை எடுத்துச்செல்வது மக்களிடையே கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. நொறுக்கப்பட்ட சுண்ணாம்புக்கற்களை அரைத் தயாரிப்பாகவோ அல்லது முடிக்கப்பட்ட தயாரிப்புகளாகவோ கருதமுடியாது என்பதால் இதனை எடுத்துச் செல்வதற்குப் போக்குவரத்து உரிமம் அவசியம் எனப் புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகம் யாழ். மாவட்டச் செயலருக்குத் தெளிவுபடுத்தியுள்ளது.இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் இருந்து சுண்ணாம்புக்கல் வெளிமாட்டங்களுக்குத் தங்கு தடையில்லாமல் எடுத்துச் செல்லப்படுகிறது. ஆளுநர் உடனடியாக சுண்ணக்கல் அகழ்வில் நிலவும் சட்டவிரோத செயற்பாடுகளைக் களைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement