• May 02 2026

சட்டவிரோத மது கடத்தல் — மூன்று பேர் கைது.!

Aathira / May 2nd 2026, 11:53 am
image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் சட்டவிரோத மதுபானத்துடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படல்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்பே பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 56.25 லீற்றர் அதாவது 75 போத்தல்கள் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டது.

கணேமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாகொட பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் யாகொட பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்தும் 56.25 லீற்றர் அதாவது 75 போத்தல்கள் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டது.

ஜா-எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏகல பகுதியில் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் அப்பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 67.5 லீற்றர் அதாவது 90 போத்தல்கள் கைப்பற்றப்பட்டது.

மூன்று சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோத மது கடத்தல் — மூன்று பேர் கைது. நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் சட்டவிரோத மதுபானத்துடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.படல்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்பே பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 56.25 லீற்றர் அதாவது 75 போத்தல்கள் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டது.கணேமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாகொட பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் யாகொட பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்தும் 56.25 லீற்றர் அதாவது 75 போத்தல்கள் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டது.ஜா-எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏகல பகுதியில் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் அப்பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 67.5 லீற்றர் அதாவது 90 போத்தல்கள் கைப்பற்றப்பட்டது.மூன்று சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement