• Jan 16 2025

கல்லாற்றில் சட்ட விரோத மணல் அகழ்வு சம்பந்தப்பட்ட புதிய அதிகாரிகள் அசமந்த போக்கு - மக்கள் விசனம்

Tharmini / Jan 13th 2025, 2:50 pm
image

கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்லாற்று பகுதியில் பல வருட காலமாக தொடர்ச்சியாக சட்ட விரோதமான முறையில் அப்பகுதியில் மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்படாத பகுதியாக இருந்த போதிலும் அப்பகுதியில் ஊடாகவே தொடர்ச்சியாக இரவு பகலாக சட்டவிரோதமான முறையில் இயற்கை வளங்களை அளிக்கப்பட்டு மணல் அகழ்வு நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட புதிய அதிகாரிகள் அசமந்த போக்குடனே காணப்படுவதாக மக்கள் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர் .

இது தொடர்பாக தற்போது புதிய அரசாங்கத்தின் செயல்பாடுகள் எவ்வாறு அமையப் போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என, மக்கள் தெரிவித்துள்ளனர் . 

மேலும் தெரிவிக்கையில், இவ்வீதி ஊடாக சட்டவிரோதமான முறையில் மணல் கொண்டு செல்வதன் காரணமாக இவ்வீதியால் பயணிக்க முடியாத நிலையில் படுகுழியும் குன்றுமாக காணப்படுவதாகவும் மற்றும் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில் பல சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.




கல்லாற்றில் சட்ட விரோத மணல் அகழ்வு சம்பந்தப்பட்ட புதிய அதிகாரிகள் அசமந்த போக்கு - மக்கள் விசனம் கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்லாற்று பகுதியில் பல வருட காலமாக தொடர்ச்சியாக சட்ட விரோதமான முறையில் அப்பகுதியில் மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்படாத பகுதியாக இருந்த போதிலும் அப்பகுதியில் ஊடாகவே தொடர்ச்சியாக இரவு பகலாக சட்டவிரோதமான முறையில் இயற்கை வளங்களை அளிக்கப்பட்டு மணல் அகழ்வு நடைபெற்று வருகிறது.இது தொடர்பாக சம்பந்தப்பட்ட புதிய அதிகாரிகள் அசமந்த போக்குடனே காணப்படுவதாக மக்கள் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர் .இது தொடர்பாக தற்போது புதிய அரசாங்கத்தின் செயல்பாடுகள் எவ்வாறு அமையப் போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என, மக்கள் தெரிவித்துள்ளனர் . மேலும் தெரிவிக்கையில், இவ்வீதி ஊடாக சட்டவிரோதமான முறையில் மணல் கொண்டு செல்வதன் காரணமாக இவ்வீதியால் பயணிக்க முடியாத நிலையில் படுகுழியும் குன்றுமாக காணப்படுவதாகவும் மற்றும் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில் பல சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement