• Sep 19 2024

வவுணதீவு, நெடுஞ்சேனையில் வீட்டுத் தோட்டத்தினை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் முன்னெடுப்பு!

Tamil nila / Dec 1st 2022, 10:09 pm
image

Advertisement

பசுமை இல்லம் அமைப்பினால் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்களின் தற்சார்புப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகளின் ஒரு அங்கமான “பசுமை வளர்ப்போம், வறுமை ஒழிப்போம்” என்ற தொனிப்பொருளுக்கு அமைவாக வீட்டுத் தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்கும் செயற்திட்டத்தின் மூலம் வவுணதீவு நெடுஞ்சேனை பிரதேசத்தில் வீட்டுத் தோட்ட பயனாளிகள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கான பொதுக் கிணறு அமைத்துக் கொடுத்து இன்றைய தினம் அதனை அம்மக்களுக்குக் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.




பசுமை இல்லம் அமைப்பின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் அருள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் வினோத், மட்டு அம்பாறை இணைப்பாளர் சாந்தன், மண்முனை மேற்குப் பிரதேசசபைச் செயலாளர் உட்பட அமைப்பின் பிரதிநிதிகள், பயனாளிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





பசுமை இல்லத்தின் மூலம் மேற்படி நெடுஞ்சேனை கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத் தோட்ட செயற்திட்டத்தின் போது மேற்படி பகுதி மக்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக புலம்பெயர் உறவான சுவிஸ் நாட்டைச் சேர்ந்த முருகேசன் உதயணன் அவர்களின் நிதியுதவியின் மூலம் மேற்படி கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டு இன்றைய தினம் அம்மக்களுக்கு கையளிக்கப்பட்டது.




இன்றைய நிகழ்வின் போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சுவிஸ் நாட்டைச் சேர்ந்த விவேகானந்தன் அவர்களின் நிதியுதவியின் மூலம் மேலும் பல வீட்டுத் தோட்ட மரக்கன்றுகள் மற்றும் பயன்தரு மரக்கன்றுகள் போன்றனவும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்;பிடத்தக்கது.

வவுணதீவு, நெடுஞ்சேனையில் வீட்டுத் தோட்டத்தினை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் முன்னெடுப்பு பசுமை இல்லம் அமைப்பினால் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்களின் தற்சார்புப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகளின் ஒரு அங்கமான “பசுமை வளர்ப்போம், வறுமை ஒழிப்போம்” என்ற தொனிப்பொருளுக்கு அமைவாக வீட்டுத் தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்கும் செயற்திட்டத்தின் மூலம் வவுணதீவு நெடுஞ்சேனை பிரதேசத்தில் வீட்டுத் தோட்ட பயனாளிகள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கான பொதுக் கிணறு அமைத்துக் கொடுத்து இன்றைய தினம் அதனை அம்மக்களுக்குக் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.பசுமை இல்லம் அமைப்பின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் அருள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் வினோத், மட்டு அம்பாறை இணைப்பாளர் சாந்தன், மண்முனை மேற்குப் பிரதேசசபைச் செயலாளர் உட்பட அமைப்பின் பிரதிநிதிகள், பயனாளிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.பசுமை இல்லத்தின் மூலம் மேற்படி நெடுஞ்சேனை கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத் தோட்ட செயற்திட்டத்தின் போது மேற்படி பகுதி மக்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக புலம்பெயர் உறவான சுவிஸ் நாட்டைச் சேர்ந்த முருகேசன் உதயணன் அவர்களின் நிதியுதவியின் மூலம் மேற்படி கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டு இன்றைய தினம் அம்மக்களுக்கு கையளிக்கப்பட்டது.இன்றைய நிகழ்வின் போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சுவிஸ் நாட்டைச் சேர்ந்த விவேகானந்தன் அவர்களின் நிதியுதவியின் மூலம் மேலும் பல வீட்டுத் தோட்ட மரக்கன்றுகள் மற்றும் பயன்தரு மரக்கன்றுகள் போன்றனவும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்;பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement