• May 19 2024

மூதூரில் சட்டவிரோத மணல் அகழ்வு!

Tamil nila / Dec 1st 2022, 10:18 pm
image

Advertisement

மூதூர் - ஷாபிநகர் பகுதியில் கொச்சித் தோட்டம் செய்யவென அனுமதிபெறப்பட்டு அங்கு சட்டவிரோதமாக மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினரும் ,கோப் குழு உறுப்பினருமான வசந்த யாப்பா ஷாபி நகரில் உள்ள குறித்த இடத்திற்கு இன்று வியாழக்கிழமை  களம் விஜயம் செய்து உண்மை நிலவரங்களை பார்த்தறிந்து கொண்டார்.இதில் மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ,சுற்றுச் சூழல் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளான அமித் சேனநாயக்க, எச்.பீ.லியனாராச்சி ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.மணல் அகழ்வு இடம்பெறும் இடத்தையும் நேரடியாக பார்வையிட்டனர்.

பாராளுமன்ற உறுப்பிரும், கோப்குழு உறுப்பினருமான வசந்த யாப்பா கருத்து தெரிவிக்கையில் ,





மூதூர் - ஷாபிநகர் பகுதியில் கொச்சித் தோட்டச் செய்கை என்ற போர்வையில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்த அநியாயத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.அத்தோடு பார்த்துக் கொண்டிருக்கவும் முடியாது.




அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் இவ் மணல் அகழ்வு இடம்பெற்றிருக்க முடியாது.இதில் பலரும் உடந்தையாக இருந்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

மூதூரில் சட்டவிரோத மணல் அகழ்வு மூதூர் - ஷாபிநகர் பகுதியில் கொச்சித் தோட்டம் செய்யவென அனுமதிபெறப்பட்டு அங்கு சட்டவிரோதமாக மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினரும் ,கோப் குழு உறுப்பினருமான வசந்த யாப்பா ஷாபி நகரில் உள்ள குறித்த இடத்திற்கு இன்று வியாழக்கிழமை  களம் விஜயம் செய்து உண்மை நிலவரங்களை பார்த்தறிந்து கொண்டார்.இதில் மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ,சுற்றுச் சூழல் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளான அமித் சேனநாயக்க, எச்.பீ.லியனாராச்சி ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.மணல் அகழ்வு இடம்பெறும் இடத்தையும் நேரடியாக பார்வையிட்டனர்.பாராளுமன்ற உறுப்பிரும், கோப்குழு உறுப்பினருமான வசந்த யாப்பா கருத்து தெரிவிக்கையில் ,மூதூர் - ஷாபிநகர் பகுதியில் கொச்சித் தோட்டச் செய்கை என்ற போர்வையில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்த அநியாயத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.அத்தோடு பார்த்துக் கொண்டிருக்கவும் முடியாது.அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் இவ் மணல் அகழ்வு இடம்பெற்றிருக்க முடியாது.இதில் பலரும் உடந்தையாக இருந்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement