• Feb 01 2026

சட்டவிரோத மணல் அகழ்வு மீண்டும் அதிகரிப்பு!

shanuja / Jan 31st 2026, 5:16 pm
image

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வெளிகண்ட்டல் ஆற்றுப்பகுதியில்  சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிக்கப்பட்டுள்ளது. 


டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட பல்ல பெருக்கு காரணமாக கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் ஆற்றுப் படுக்கை மற்றும் வயல் பகுதிகளில் இயற்கையாகவே தேங்கி கிடக்கும் மணல்களை சட்டவிரோதமான முறையில் அகழ்ந்தெடுக்கின்றனர். 


இரவு வேளைகளில் உழவு இயந்திரத்தின் மூலம் வேறு பகுதிக்கு கொண்டு சென்று டிப்பர் வாகனம் மூலம்  ஏற்றி எந்தவித அனுமதியும் இன்றி வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக இப்பகுதியில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 


 எனவே குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொது அமைப்புகள் தெரிவித்தனர். 


சட்டவிரோத மணல் அகழ்வு மீண்டும் அதிகரிப்பு கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வெளிகண்ட்டல் ஆற்றுப்பகுதியில்  சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிக்கப்பட்டுள்ளது. டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட பல்ல பெருக்கு காரணமாக கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் ஆற்றுப் படுக்கை மற்றும் வயல் பகுதிகளில் இயற்கையாகவே தேங்கி கிடக்கும் மணல்களை சட்டவிரோதமான முறையில் அகழ்ந்தெடுக்கின்றனர். இரவு வேளைகளில் உழவு இயந்திரத்தின் மூலம் வேறு பகுதிக்கு கொண்டு சென்று டிப்பர் வாகனம் மூலம்  ஏற்றி எந்தவித அனுமதியும் இன்றி வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக இப்பகுதியில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.  எனவே குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொது அமைப்புகள் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement