• Feb 10 2025

இலங்கையின் 2025 வரவு செலவுத் திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை

IMF
Chithra / Feb 9th 2025, 12:39 pm
image


இந்த ஆண்டுக்கான (2025) வரவு-செலவுத் திட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு - செலவுத் திட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதுடன், மார்ச் மாதம் 21ஆம் திகதி வாக்கெடுப்பிற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 

இவ்வாறானதொரு நிலையிலேயே கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கோசாக் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது, 

2024ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் திகதி இலங்கையில், சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வு குறித்து பணியாளர் மட்ட ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.

இதன் பிரகாரம் நாணய நிதியத்தின்  நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 333 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இலங்கைக்கு கிடைக்கும்.

எவ்வாறாயினும், இந்த நிதியுதவிக்கான மேலதிக உறுதிப்பாடல்களுக்கான கலந்துரையாடல்கள் எதிர்வரும் வாரங்களில் நடைபெற உள்ளது.

இலங்கையின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரல் பாராட்டத்தக்க விளைவுகளைத் ஏற்படுத்தியுள்ளது. 

2024 ஆம் ஆண்டின் நான்காவது - மூன்றாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 5.5 சதவீதம் வளர்ச்சியடைந்தது.

2024ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் சராசரி பணவீக்கம் இலக்கை விட மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் 2024ஆம் ஆண்டின் இறுதியில் சர்வதேச இருப்புக்கள் 6.1 பில்லியனாக அதிகரித்துள்ளது.  

எனினும், 2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை கருத்தில் கொள்ளும் போது, கடந்த நவம்பரில் எட்டப்பட்ட பணியாளர் நிலை ஒப்பந்துடன் தொடர்புப்படுகிறது. 

இதனை அடுத்த வாரங்களில் இடம்பெற கூடிய கலந்துரையாடல்களின் போது நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்கு உட்படுத்தப்படும்.

எனவே,  விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட நிபந்தனைகளுக்கு இணங்கும் வகையில், 2025 வரவு -செலவு திட்டத்தை சமர்ப்பது முக்கியமாகும் என கூறியுள்ளார். 


இலங்கையின் 2025 வரவு செலவுத் திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை இந்த ஆண்டுக்கான (2025) வரவு-செலவுத் திட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு - செலவுத் திட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதுடன், மார்ச் மாதம் 21ஆம் திகதி வாக்கெடுப்பிற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இவ்வாறானதொரு நிலையிலேயே கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கோசாக் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் கூறியுள்ளதாவது, 2024ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் திகதி இலங்கையில், சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வு குறித்து பணியாளர் மட்ட ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.இதன் பிரகாரம் நாணய நிதியத்தின்  நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 333 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இலங்கைக்கு கிடைக்கும்.எவ்வாறாயினும், இந்த நிதியுதவிக்கான மேலதிக உறுதிப்பாடல்களுக்கான கலந்துரையாடல்கள் எதிர்வரும் வாரங்களில் நடைபெற உள்ளது.இலங்கையின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரல் பாராட்டத்தக்க விளைவுகளைத் ஏற்படுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டின் நான்காவது - மூன்றாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 5.5 சதவீதம் வளர்ச்சியடைந்தது.2024ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் சராசரி பணவீக்கம் இலக்கை விட மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் 2024ஆம் ஆண்டின் இறுதியில் சர்வதேச இருப்புக்கள் 6.1 பில்லியனாக அதிகரித்துள்ளது.  எனினும், 2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை கருத்தில் கொள்ளும் போது, கடந்த நவம்பரில் எட்டப்பட்ட பணியாளர் நிலை ஒப்பந்துடன் தொடர்புப்படுகிறது. இதனை அடுத்த வாரங்களில் இடம்பெற கூடிய கலந்துரையாடல்களின் போது நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்கு உட்படுத்தப்படும்.எனவே,  விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட நிபந்தனைகளுக்கு இணங்கும் வகையில், 2025 வரவு -செலவு திட்டத்தை சமர்ப்பது முக்கியமாகும் என கூறியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement