நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் இன்றைய தினமும் சற்று மோசமான மட்டத்தில் நிலவக்கூடும் எனத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் சுற்றாடல் ஆய்வுகள் மற்றும் சேவைகள் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இன்றைய தினம் நாடு முழுவதும் காற்றின் தரச் சுட்டெண் 64 முதல் 116 வரை காணப்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அதன்படி, காலி - கராப்பிட்டி, குருநாகல், இரத்தினபுரி - கட்டங்கம, புத்தளம், பதுளை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் காற்றின் தரம் சற்று மோசமான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் காற்றின் தரம் மிதமான மட்டத்தில் இருப்பதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் மோசமான மட்டத்தில் நிலவும் காற்றின் தரம் நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் இன்றைய தினமும் சற்று மோசமான மட்டத்தில் நிலவக்கூடும் எனத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் சுற்றாடல் ஆய்வுகள் மற்றும் சேவைகள் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,இன்றைய தினம் நாடு முழுவதும் காற்றின் தரச் சுட்டெண் 64 முதல் 116 வரை காணப்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அதன்படி, காலி - கராப்பிட்டி, குருநாகல், இரத்தினபுரி - கட்டங்கம, புத்தளம், பதுளை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் காற்றின் தரம் சற்று மோசமான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் ஏனைய பகுதிகளில் காற்றின் தரம் மிதமான மட்டத்தில் இருப்பதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.