யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியின் பதில் அதிபர் ஜனாபா எம்.எஸ்.எப்.சப்னா தலைமையில் 78ஆவது தேசிய சுதந்திர தினம் பாடசாலை முன்றலில் மாணவர்களின் பங்குபற்றலுடன் (4) நடைபெற்றுள்ளது.
பதில் அதிபர் சப்னா தேசியக் கீதத்துடன் தேசியக் கொடி ஏற்றப்பட்டதுடன், அதிபர் மற்றும் மாணவர்கள் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து பதில் அதிபர் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இனிப்புக்களும் பரிமாறப்பட்டன.
சுதந்திர தின நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் தேசிய சுதந்திர தினம் அனுஸ்டிப்பு யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியின் பதில் அதிபர் ஜனாபா எம்.எஸ்.எப்.சப்னா தலைமையில் 78ஆவது தேசிய சுதந்திர தினம் பாடசாலை முன்றலில் மாணவர்களின் பங்குபற்றலுடன் (4) நடைபெற்றுள்ளது.பதில் அதிபர் சப்னா தேசியக் கீதத்துடன் தேசியக் கொடி ஏற்றப்பட்டதுடன், அதிபர் மற்றும் மாணவர்கள் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பதில் அதிபர் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இனிப்புக்களும் பரிமாறப்பட்டன. சுதந்திர தின நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.