நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன் வந்து எமது தோட்ட வீதியை செப்பனிட உடன் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை முன் வைத்து மஸ்கெலியாவில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
203 வருடங்களாக மஸ்கெலியா கிலன்டில் தோட்ட லெங்கா பிரிவில் வசிக்கும் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இன்று காலை 11.30 மணிக்கு கருப்பு நிற கொடிகள் மற்றும் பதாதைகள் ஏந்திய வண்ணம் தோட்ட பிரிவில் இருந்து கோஷம் எழுப்பி சாமி மலை ஓல்ட் டன் பிரதான சாலைக்கு வந்தனர்.
சுமார் 5 கிலோ மீட்டர் வீதியை கடந்த 203 ஆண்டுகளாக தோட்ட நிர்வாகமோ மாறி வந்த ஆட்சியாளர்களோ எம்மால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களோ கடந்த காலங்களில் இருந்த மாகாண சபை உறுப்பினர்களோ அல்லது பிரதேச சபையின் உறுப்பினர்களோ செப்பனிட வில்லை.
கடந்த ஆட்சி காலத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் இணைந்து இந்த வீதியை செப்பனிட அடிக்கல் நாட்டப்பட்ட போதும் வீதி செப்பனிட வில்லை.
நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இவ் வழியாக கொண்டு செல்ல தொட்டில் கட்டி தூக்க வேண்டி உள்ளதாகவும் 1990 நோயாளர் காவு வண்டி பிரதான வீதியில் வந்து நின்று விடும் சுமார் 3.5 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து தொட்டில் கட்டி தூக்கி வந்து நோயாளர் காவு வண்டியில் கொண்டு செல்ல வேண்டி உள்ளதாகவும் அவ்வாறு கொண்டு வரும் வேளையில் பலர் மரணம் அடைந்து உள்ளனர் எனவும் சில கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் இடைநடுவில் ஏற்பட்டது எனவும் கடந்த மாதம் பாடசாலை மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டது என தெரிவித்து நாடு 78 சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் எமக்கு சுதந்திரம் இல்லை என்று கூறி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
தோட்ட வீதியை செப்பனிடவேண்டும் - மஸ்கெலியா லெங்கா தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன் வந்து எமது தோட்ட வீதியை செப்பனிட உடன் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை முன் வைத்து மஸ்கெலியாவில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.203 வருடங்களாக மஸ்கெலியா கிலன்டில் தோட்ட லெங்கா பிரிவில் வசிக்கும் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இன்று காலை 11.30 மணிக்கு கருப்பு நிற கொடிகள் மற்றும் பதாதைகள் ஏந்திய வண்ணம் தோட்ட பிரிவில் இருந்து கோஷம் எழுப்பி சாமி மலை ஓல்ட் டன் பிரதான சாலைக்கு வந்தனர்.சுமார் 5 கிலோ மீட்டர் வீதியை கடந்த 203 ஆண்டுகளாக தோட்ட நிர்வாகமோ மாறி வந்த ஆட்சியாளர்களோ எம்மால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களோ கடந்த காலங்களில் இருந்த மாகாண சபை உறுப்பினர்களோ அல்லது பிரதேச சபையின் உறுப்பினர்களோ செப்பனிட வில்லை.கடந்த ஆட்சி காலத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் இணைந்து இந்த வீதியை செப்பனிட அடிக்கல் நாட்டப்பட்ட போதும் வீதி செப்பனிட வில்லை. நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இவ் வழியாக கொண்டு செல்ல தொட்டில் கட்டி தூக்க வேண்டி உள்ளதாகவும் 1990 நோயாளர் காவு வண்டி பிரதான வீதியில் வந்து நின்று விடும் சுமார் 3.5 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து தொட்டில் கட்டி தூக்கி வந்து நோயாளர் காவு வண்டியில் கொண்டு செல்ல வேண்டி உள்ளதாகவும் அவ்வாறு கொண்டு வரும் வேளையில் பலர் மரணம் அடைந்து உள்ளனர் எனவும் சில கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் இடைநடுவில் ஏற்பட்டது எனவும் கடந்த மாதம் பாடசாலை மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டது என தெரிவித்து நாடு 78 சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் எமக்கு சுதந்திரம் இல்லை என்று கூறி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.