• Feb 05 2026

நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட புனித தாதுக்கள் – இன்று முதல் உத்தியோகபூர்வ தரிசனம்!

dileesiya / Feb 4th 2026, 4:00 pm
image

இந்திய அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடன் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட புனித தாதுக்கள் இன்று (04) பிற்பகல் 1 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன. 


இந்தியாவிற்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் இந்த புனித தாதுக்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன. 


இவை இன்று மாலை கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளன. 


ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று பிற்பகல் புனித தாதுக்கள் தரிசனம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. 


நாளை முதல் எதிர்வரும் பெப்ரவரி 11 ஆம் திகதி வரை கொழும்பு கங்காராம விகாரையில் பொதுமக்களுக்கு இந்த புனித தாதுக்களை தரிசிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 


இதனால் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட புனித தாதுக்கள் – இன்று முதல் உத்தியோகபூர்வ தரிசனம் இந்திய அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடன் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட புனித தாதுக்கள் இன்று (04) பிற்பகல் 1 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன. இந்தியாவிற்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் இந்த புனித தாதுக்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன. இவை இன்று மாலை கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளன. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று பிற்பகல் புனித தாதுக்கள் தரிசனம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. நாளை முதல் எதிர்வரும் பெப்ரவரி 11 ஆம் திகதி வரை கொழும்பு கங்காராம விகாரையில் பொதுமக்களுக்கு இந்த புனித தாதுக்களை தரிசிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement