• Feb 05 2026

நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்ற தேசிய சுதந்திர தின விழா நிகழ்வுகள்!

dileesiya / Feb 4th 2026, 4:30 pm
image

 அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது  குவாஷி நீதிமன்ற வளாகத்தில்  சுதந்திர தின விழா நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இதன் போது 78 ஆவது சுதந்திர தின  தேசிய   கொடியை குவாஷி நீதிமன்ற நீதிபதி அஹமட் லெப்பை ஆதம்பாவா  ஏற்றி வைத்தார். 

இந்நாட்டின் சுபீட்சத்திற்காகவும் சமாதானத்திற்காகவும் இந்நாட்டு மக்கள் ஐக்கியப்பட்டு வாழவேண்டும் என்பதற்காகவும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

மேலும்     நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் ஏனையவர்களுக்காக 2 நிமிட மெளன பிரார்த்தனையும் இடம்பெற்றது. 

அதனை தொடர்ந்து மௌலவி ஏ.எம் நவாஸ்  பிரார்த்தனை மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் கல்முனை மேல் நீதிமன்ற தொழிநுட்பவியலாளர் எம்.எஸ்.எம் றிப்கான், ஓய்வு பெற்ற நீதிமன்ற முகாமைத்துவ உதவியாளரும் குவாஷி நீதிமன்ற நிர்வாகச் செயலாளருமான  எஸ்.ஜமால்டீன் ,   ஓய்வு பெற்ற நீர்பாசன உத்தியோகத்தரும் குவாஷி நீதிமன்ற உத்தியோகத்தருமான  ஏ.எம் றஸீட் ,  சாய்ந்தமருது பொலிஸ் உத்தியோகத்தர்கள் , மற்றும் குவாஷி நீதிமன்ற  நியாயாதிக்க உத்தியோகத்தர்களான  எம்.ஐ.உதுமாலெப்பை, ஏ.டபிள்யு பாத்திமா சறோபா, ஏ.எம் பாத்திமா சஸ்ரின், ஜெ.றில்சா ஆகியோர்  கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.



அடுத்து,

மலையக அரசியல் அரங்கத்தின் 78 வது சுதந்திர தினம் இன்று காலை சாமி மலை ஸ்டொக்கம் தோட்ட குழந்தைகள் காப்பக முற்றத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் அதன் உதவி செயலாளர் சுப்பிரமணியம் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் அதன் தேசிய அமைப்பாளர் திரு.எஸ்.சுரேஸ்குமார் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.



அடுத்து,

இலங்கையின் 78 வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (4) புத்தளம் மாவட்ட செயலாளர் இந்திக மஞ்சுள சில்வா தலைமையில் புத்தளத்தில்  இடம்பெற்றது.

புத்தளம் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டிலும் புத்தளத்திலுள்ள அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும் புத்தளம் - கொழும்பு முகத்திடலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான கயான் ஜானக பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான முஹம்மட் பைஸல், அஜித் கிஹான், புத்தளம் நகர முதல்வர் பொறியியலாளர் ரின்ஷாட் அஹ்மட் உட்பட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், சர்வமத தலைவர்கள், புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பொலிஸ் அதிகாரிகள், இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், வலயக்கல்வி பணிப்பாளர்கள், மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலக பணியாளர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும், புத்தளம் நகரம் உட்பட பல பகுதிகளில் இருந்தும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் வயோதிபர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது , நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலின் கோரத் தாண்டவத்தினால் உயிரிழந்த பொதுமக்களுக்காகவும் இரு நிமிடங்கள் மௌன அஞ்சலியும் இடம்பெற்றது.

அத்துடன், தமிழ், சிங்களம் மற்றும் இஸ்லாமிய கலாசாரங்களை பிரதிபலிக்கும் வகையில் புத்தளம், கருவலகஸ்வௌ, ஆனமடுவ, பல்லம ஆகிய கலாச்சார மத்திய நிலையங்கள், புத்தளம் இந்துக் கல்லூரி, புத்தளம் சென். அன்ரூஸ் மத்தியக் கல்லூரி, ஆனந்தா தேசியப் பாடசாலை மற்றும் புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

மேலும், தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கயான் ஜானக மற்றும் முஹம்மட் பைஸல் ஆகியோர் இதன்போது உரையாற்றினார்கள்.

இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் உள்ள 16 பிரதேச செயலகங்களிலும் இன்றைய தினம் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் சுதந்திர தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

புத்தளம் மாவட்டச் செயலாளரின் ஆலோசனைக்கு அமைய, ஒவ்வொரு பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்களின் மேற்பார்வையில் மேற்படி நிகழ்வுகள் நடைபெற்றன.

மேலும், சிரமதானங்கள், விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என்பனவும் ஒவ்வொரு பகுதிகளிலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



அடுத்து,

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள்  இன்று தேசியக் கொடி ஏற்றலுடன் ஆரம்பமானது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர்  குமாரசாமி பிரபாகரமூர்த்தியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பூசை வழிபாடுகள் இடம்பெற்றமைமைத் தொடர்ந்து மாநாட்டு மண்டபத்தில் இணைய வழி ஊடாக தேசிய நிகழ்வுகளோடு உத்தியோகத்தர்கள் அனைவரும் இணைந்திருந்தனர்.

செயலக உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதேச செயலாளர், சுதந்திர தினம் தொடர்பான வரலாற்று ரீதியான விடயங்களை குறிப்பிட்டு,  பிரதேச செயலகத்தில்  கருவிலுள்ள குழந்கைகள் நலனைக் கவனிப்பது தொடங்கி, முதியோர் சேவை ஈறாக ஒவ்வோரு துறை சார்ந்தும் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் கிராம மட்டத்தில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் அனைவரும் ஒன்றுபட்டு பிரதேசத்தின் அபிவிருத்திக்காக பணியாற்றுவதோடு, நீங்களும் மகிழ்ச்சியுடன் மேம்பட்ட எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்விலே செப்ரெம்பர் மாதம் முதல் டிசெம்பர் மாதம் வரை காலை 8.30 முன்னர் வருகை தந்த உத்தியோகத்தர்களில் முதல் மூன்று நிலைகளிலுள்ள உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பும், முதியோர் செயலக செயற்பாடுகளில் அர்ப்பணிப்பாக பணியாற்றிய உத்தியோகத்தருக்கு அமைச்சின் செயலாளரால் வழங்கப்பட்ட மெச்சுரை வழங்கும் நிகழ்வும்  இடம்பெற்றது.

நிறைவாக செயலக வளாகத்தில் சிரமதானம் மற்றும் மரநடுகை நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


அடுத்து,

மஸ்கெலியா பிரதேச சபையின் முன்னாள் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையில் இன்று  78 வது சுதந்திர தினம் நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தேசிய கொடியை ஏற்றினார்.

நிகழ்விற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் பணிபுரியும் அதிகாரிகள் அதன் செயலாளர் மற்றும் சிறுவர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.









நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்ற தேசிய சுதந்திர தின விழா நிகழ்வுகள்  அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது  குவாஷி நீதிமன்ற வளாகத்தில்  சுதந்திர தின விழா நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.இதன் போது 78 ஆவது சுதந்திர தின  தேசிய   கொடியை குவாஷி நீதிமன்ற நீதிபதி அஹமட் லெப்பை ஆதம்பாவா  ஏற்றி வைத்தார். இந்நாட்டின் சுபீட்சத்திற்காகவும் சமாதானத்திற்காகவும் இந்நாட்டு மக்கள் ஐக்கியப்பட்டு வாழவேண்டும் என்பதற்காகவும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.மேலும்     நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் ஏனையவர்களுக்காக 2 நிமிட மெளன பிரார்த்தனையும் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து மௌலவி ஏ.எம் நவாஸ்  பிரார்த்தனை மேற்கொண்டார்.இந்நிகழ்வில் கல்முனை மேல் நீதிமன்ற தொழிநுட்பவியலாளர் எம்.எஸ்.எம் றிப்கான், ஓய்வு பெற்ற நீதிமன்ற முகாமைத்துவ உதவியாளரும் குவாஷி நீதிமன்ற நிர்வாகச் செயலாளருமான  எஸ்.ஜமால்டீன் ,   ஓய்வு பெற்ற நீர்பாசன உத்தியோகத்தரும் குவாஷி நீதிமன்ற உத்தியோகத்தருமான  ஏ.எம் றஸீட் ,  சாய்ந்தமருது பொலிஸ் உத்தியோகத்தர்கள் , மற்றும் குவாஷி நீதிமன்ற  நியாயாதிக்க உத்தியோகத்தர்களான  எம்.ஐ.உதுமாலெப்பை, ஏ.டபிள்யு பாத்திமா சறோபா, ஏ.எம் பாத்திமா சஸ்ரின், ஜெ.றில்சா ஆகியோர்  கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.அடுத்து,மலையக அரசியல் அரங்கத்தின் 78 வது சுதந்திர தினம் இன்று காலை சாமி மலை ஸ்டொக்கம் தோட்ட குழந்தைகள் காப்பக முற்றத்தில் நடைபெற்றது.நிகழ்வில் அதன் உதவி செயலாளர் சுப்பிரமணியம் தலைமையில் இடம்பெற்றது.நிகழ்வில் அதன் தேசிய அமைப்பாளர் திரு.எஸ்.சுரேஸ்குமார் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.அடுத்து,இலங்கையின் 78 வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (4) புத்தளம் மாவட்ட செயலாளர் இந்திக மஞ்சுள சில்வா தலைமையில் புத்தளத்தில்  இடம்பெற்றது.புத்தளம் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டிலும் புத்தளத்திலுள்ள அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும் புத்தளம் - கொழும்பு முகத்திடலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான கயான் ஜானக பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான முஹம்மட் பைஸல், அஜித் கிஹான், புத்தளம் நகர முதல்வர் பொறியியலாளர் ரின்ஷாட் அஹ்மட் உட்பட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், சர்வமத தலைவர்கள், புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பொலிஸ் அதிகாரிகள், இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், வலயக்கல்வி பணிப்பாளர்கள், மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலக பணியாளர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.மேலும், புத்தளம் நகரம் உட்பட பல பகுதிகளில் இருந்தும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் வயோதிபர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.இதன்போது , நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலின் கோரத் தாண்டவத்தினால் உயிரிழந்த பொதுமக்களுக்காகவும் இரு நிமிடங்கள் மௌன அஞ்சலியும் இடம்பெற்றது.அத்துடன், தமிழ், சிங்களம் மற்றும் இஸ்லாமிய கலாசாரங்களை பிரதிபலிக்கும் வகையில் புத்தளம், கருவலகஸ்வௌ, ஆனமடுவ, பல்லம ஆகிய கலாச்சார மத்திய நிலையங்கள், புத்தளம் இந்துக் கல்லூரி, புத்தளம் சென். அன்ரூஸ் மத்தியக் கல்லூரி, ஆனந்தா தேசியப் பாடசாலை மற்றும் புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.மேலும், தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கயான் ஜானக மற்றும் முஹம்மட் பைஸல் ஆகியோர் இதன்போது உரையாற்றினார்கள்.இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் உள்ள 16 பிரதேச செயலகங்களிலும் இன்றைய தினம் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் சுதந்திர தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.புத்தளம் மாவட்டச் செயலாளரின் ஆலோசனைக்கு அமைய, ஒவ்வொரு பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்களின் மேற்பார்வையில் மேற்படி நிகழ்வுகள் நடைபெற்றன.மேலும், சிரமதானங்கள், விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என்பனவும் ஒவ்வொரு பகுதிகளிலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.அடுத்து,இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள்  இன்று தேசியக் கொடி ஏற்றலுடன் ஆரம்பமானது.சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர்  குமாரசாமி பிரபாகரமூர்த்தியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பூசை வழிபாடுகள் இடம்பெற்றமைமைத் தொடர்ந்து மாநாட்டு மண்டபத்தில் இணைய வழி ஊடாக தேசிய நிகழ்வுகளோடு உத்தியோகத்தர்கள் அனைவரும் இணைந்திருந்தனர்.செயலக உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதேச செயலாளர், சுதந்திர தினம் தொடர்பான வரலாற்று ரீதியான விடயங்களை குறிப்பிட்டு,  பிரதேச செயலகத்தில்  கருவிலுள்ள குழந்கைகள் நலனைக் கவனிப்பது தொடங்கி, முதியோர் சேவை ஈறாக ஒவ்வோரு துறை சார்ந்தும் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் கிராம மட்டத்தில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் அனைவரும் ஒன்றுபட்டு பிரதேசத்தின் அபிவிருத்திக்காக பணியாற்றுவதோடு, நீங்களும் மகிழ்ச்சியுடன் மேம்பட்ட எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.இந்நிகழ்விலே செப்ரெம்பர் மாதம் முதல் டிசெம்பர் மாதம் வரை காலை 8.30 முன்னர் வருகை தந்த உத்தியோகத்தர்களில் முதல் மூன்று நிலைகளிலுள்ள உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பும், முதியோர் செயலக செயற்பாடுகளில் அர்ப்பணிப்பாக பணியாற்றிய உத்தியோகத்தருக்கு அமைச்சின் செயலாளரால் வழங்கப்பட்ட மெச்சுரை வழங்கும் நிகழ்வும்  இடம்பெற்றது.நிறைவாக செயலக வளாகத்தில் சிரமதானம் மற்றும் மரநடுகை நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.அடுத்து,மஸ்கெலியா பிரதேச சபையின் முன்னாள் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையில் இன்று  78 வது சுதந்திர தினம் நிகழ்வு இடம்பெற்றது.நிகழ்வில் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தேசிய கொடியை ஏற்றினார்.நிகழ்விற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் பணிபுரியும் அதிகாரிகள் அதன் செயலாளர் மற்றும் சிறுவர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement