• Feb 05 2026

கந்தளாயில் தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டம்!

dileesiya / Feb 4th 2026, 2:17 pm
image

இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, கந்தளாய் பிரதேச செயலகம் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த விசேட சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டம் இன்று ( 04 ) கந்தளாய் குளக்கரைப் பகுதியில் நடைபெற்றுள்ளது.


இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இரண்டு முக்கிய செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.


சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் பிரதேசத்தின் முக்கிய இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன்,கந்தளாய் குளக்கரைப் பகுதியைச் சுத்தப்படுத்தும் சிரமதானப் பணியும் முன்னெடுக்கப்பட்டது.


கந்தளாய் பிரதேச செயலாளர்  சுவர்ணா பெரேரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச செயலக ஊழியர்கள், கந்தளாய் பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள், சிவில் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தேசிய சுதந்திர தினத்தை வெறும் கொண்டாட்டமாக மட்டுமன்றி, சமூகத்திற்கும் சுற்றாடலுக்கும் பயனுள்ளதாக மாற்றும் நோக்கில் இம்முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கந்தளாயில் தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டம் இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, கந்தளாய் பிரதேச செயலகம் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த விசேட சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டம் இன்று ( 04 ) கந்தளாய் குளக்கரைப் பகுதியில் நடைபெற்றுள்ளது.இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இரண்டு முக்கிய செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் பிரதேசத்தின் முக்கிய இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன்,கந்தளாய் குளக்கரைப் பகுதியைச் சுத்தப்படுத்தும் சிரமதானப் பணியும் முன்னெடுக்கப்பட்டது.கந்தளாய் பிரதேச செயலாளர்  சுவர்ணா பெரேரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச செயலக ஊழியர்கள், கந்தளாய் பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள், சிவில் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.தேசிய சுதந்திர தினத்தை வெறும் கொண்டாட்டமாக மட்டுமன்றி, சமூகத்திற்கும் சுற்றாடலுக்கும் பயனுள்ளதாக மாற்றும் நோக்கில் இம்முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement