78வது சுதந்திரதினத்தை முன்னிட்டு வடக்கில் இன ஒற்றுமையை பிரதிபலிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட வாகனப்பேரணியும் நடைபவனியும் வவுனியாவில் இன்று இடம்பெற்றது.
வன்னிமக்கள் ஒன்றியத்தின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வானது வவுனியா புதிய பேருந்து நிலையப் பகுதியில் ஆரம்பமாகி வைத்தியசாலை சுற்றுவட்டம் ஊடாக பசார் வீதியை அடைந்தது.
அங்கிருந்து கண்டி வீதியில் நிறைவுற்றது.
இதன்போது தேசியக்கொடியை ஏந்தியவாறு வாகனங்கள் பேரணியாக சென்றதுடன், இனங்களின் கலாச்சாரங்களையும் பிரதிபலிக்கக்கூடிய நடைபவனியும் இடம்பெற்றது.
நிகழ்வில் வன்னிமக்கள் ஒன்றியத்தை சேர்ந்தவர்கள், மதகுருமார்கள், பொது அமைப்பினர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை கிளிநொச்சியில் 78வது சுதந்திர தின நிகழ்வு பிரமாண்டமாக நடைபெற்றது. வடமாகாண மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற்றது.
குறித்த நிழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
குழந்தைகளால் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து இன நல்லிணக்கம், சமாதானத்தினை வெளிப்படுத்தும் வகையில் புறாக்கள் பறக்கவிடப்பட்டன.
தொடர்ந்து, மங்கள விளக்கேற்றப்பட்டதுடன், கலை நிகழ்வுகளும் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
சுதந்திர தினத்தில் வாகனப் பேரணியும், நடைபவனியும் வவுனியா, கிளிநொச்சியில் கொண்டாட்டம் 78வது சுதந்திரதினத்தை முன்னிட்டு வடக்கில் இன ஒற்றுமையை பிரதிபலிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட வாகனப்பேரணியும் நடைபவனியும் வவுனியாவில் இன்று இடம்பெற்றது.வன்னிமக்கள் ஒன்றியத்தின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வானது வவுனியா புதிய பேருந்து நிலையப் பகுதியில் ஆரம்பமாகி வைத்தியசாலை சுற்றுவட்டம் ஊடாக பசார் வீதியை அடைந்தது.அங்கிருந்து கண்டி வீதியில் நிறைவுற்றது. இதன்போது தேசியக்கொடியை ஏந்தியவாறு வாகனங்கள் பேரணியாக சென்றதுடன், இனங்களின் கலாச்சாரங்களையும் பிரதிபலிக்கக்கூடிய நடைபவனியும் இடம்பெற்றது.நிகழ்வில் வன்னிமக்கள் ஒன்றியத்தை சேர்ந்தவர்கள், மதகுருமார்கள், பொது அமைப்பினர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.இதேவேளை கிளிநொச்சியில் 78வது சுதந்திர தின நிகழ்வு பிரமாண்டமாக நடைபெற்றது. வடமாகாண மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற்றது.குறித்த நிழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். குழந்தைகளால் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து இன நல்லிணக்கம், சமாதானத்தினை வெளிப்படுத்தும் வகையில் புறாக்கள் பறக்கவிடப்பட்டன.தொடர்ந்து, மங்கள விளக்கேற்றப்பட்டதுடன், கலை நிகழ்வுகளும் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.