• Nov 26 2024

ஐ.எம்.எவ். பிரதிநிதிகளுடன் அடுத்த வராம் சந்திப்பு - எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு..!samugammedia

mathuri / Mar 13th 2024, 6:52 am
image

அடுத்த சில நாட்களில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை ஐக்கிய மக்கள் சக்தி சந்திக்கவுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத் திட்டத்தின் 1120 ஆவது கட்டமாக, 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை கம்பஹா,தொம்பே,மல்வான மகா வித்தியாலயத்துக்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் நேற்று (12) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


தன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இந்நாட்டில் சிசுக்கள், குழந்தை மற்றும் தாய்மார்களது ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளது. 2022 இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 5 - 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 25 வீத குழந்தைகள் எடை குறைந்த குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது.

இதுபோன்ற இன்னும் பல புள்ளிவிவரங்கள் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதையும், தாய்மார்களும் குழந்தைகளும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படக்கூடியவர்களாக மாறி வருவதையும் எடுத்துக்காட்டுகின்றன.

அடுத்த சில நாட்களில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை ஐக்கிய மக்கள் சக்தி சந்திக்கவுள்ளது. இந்நாட்டில் தாய்மார்கள், சிசுக்கள், குழந்தைகள் மற்றும் பாடசாலை பிள்ளைகளின் ஊட்டச்சத்து குறைபாடு நிலையை உடனடியாகப் போக்க சர்வதேச நாணய நிதியத்தின் விசேட ஒத்துழைப்பு வேலைத்திட்டம் தேவை.


சர்வதேச நாணய நிதியம் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பிற நிதி நிறுவனங்களை ஒன்றிணைத்து ஒரு சிறப்பு நிதயத்தை நிறுவி, இந்த போசாக்கின்மை நிலையிலிருந்து விடுபட விசேட தேசிய வேலைத்திட்டமொன்று தேவை.

ஊட்டச்சத்து குறைபாட்டின் வளர்ச்சி ஒரு தீய சுழற்சியை உருவாக்குதற்கு சமன். இது நாட்டின் உற்பத்தித் திறனில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

அனைத்து அரச பாடசாலைளிகளிலும் அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கும் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். நாட்டின் எதிர்காலம் சிறுவர்கள் என்பதால் அவர்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட வேண்டும்." - என்றார்.

ஐ.எம்.எவ். பிரதிநிதிகளுடன் அடுத்த வராம் சந்திப்பு - எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு.samugammedia அடுத்த சில நாட்களில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை ஐக்கிய மக்கள் சக்தி சந்திக்கவுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத் திட்டத்தின் 1120 ஆவது கட்டமாக, 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை கம்பஹா,தொம்பே,மல்வான மகா வித்தியாலயத்துக்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் நேற்று (12) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,"இந்நாட்டில் சிசுக்கள், குழந்தை மற்றும் தாய்மார்களது ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளது. 2022 இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 5 - 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 25 வீத குழந்தைகள் எடை குறைந்த குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது.இதுபோன்ற இன்னும் பல புள்ளிவிவரங்கள் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதையும், தாய்மார்களும் குழந்தைகளும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படக்கூடியவர்களாக மாறி வருவதையும் எடுத்துக்காட்டுகின்றன.அடுத்த சில நாட்களில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை ஐக்கிய மக்கள் சக்தி சந்திக்கவுள்ளது. இந்நாட்டில் தாய்மார்கள், சிசுக்கள், குழந்தைகள் மற்றும் பாடசாலை பிள்ளைகளின் ஊட்டச்சத்து குறைபாடு நிலையை உடனடியாகப் போக்க சர்வதேச நாணய நிதியத்தின் விசேட ஒத்துழைப்பு வேலைத்திட்டம் தேவை.சர்வதேச நாணய நிதியம் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பிற நிதி நிறுவனங்களை ஒன்றிணைத்து ஒரு சிறப்பு நிதயத்தை நிறுவி, இந்த போசாக்கின்மை நிலையிலிருந்து விடுபட விசேட தேசிய வேலைத்திட்டமொன்று தேவை.ஊட்டச்சத்து குறைபாட்டின் வளர்ச்சி ஒரு தீய சுழற்சியை உருவாக்குதற்கு சமன். இது நாட்டின் உற்பத்தித் திறனில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.அனைத்து அரச பாடசாலைளிகளிலும் அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கும் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். நாட்டின் எதிர்காலம் சிறுவர்கள் என்பதால் அவர்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட வேண்டும்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement