தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் யாரேனும் தவறு செய்து, அது நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி கையூட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, அவருக்கு எதிராக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கையளித்துள்ள அவநம்பிக்கை பிரேரணை தொடர்பாகவும் கலந்துரையாடப்படுகின்றது.
இந்த நிலையில் இந்த விடயங்கள் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் வினவியது.
அதற்கு பதிலளித்த அவர்,
அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக குற்றச்சாட்டு இருப்பதாக கூறப்படுகின்றது.
அவ்வாறு இருந்தால் அது குறித்து உரிய விசாரணைகள் இடம்பெறும் என்றுத் தெரிவித்தார்.
எனினும், தற்போதைய நிலையில் இவ்வாறான குற்றச்சாட்டுகள் வரும் போது, அதனை விசாரணை செய்வதற்கு தமது அரசாங்கம் எவ்வித தடையையும் ஏற்படுத்தாது என்றும் தெரிவித்தார்.
ஆனால், முறைப்பாடு செய்தவுடன் அவர்களுக்கு எதிராக உடனடியாக எவ்வித நடவடிக்கையையும் எடுக்க முடியாது என அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியினருக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்படின் உடன் நடவடிக்கை - ஆனந்த விஜேபால தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் யாரேனும் தவறு செய்து, அது நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி கையூட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, அவருக்கு எதிராக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.அத்துடன், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கையளித்துள்ள அவநம்பிக்கை பிரேரணை தொடர்பாகவும் கலந்துரையாடப்படுகின்றது.இந்த நிலையில் இந்த விடயங்கள் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் வினவியது.அதற்கு பதிலளித்த அவர், அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக குற்றச்சாட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. அவ்வாறு இருந்தால் அது குறித்து உரிய விசாரணைகள் இடம்பெறும் என்றுத் தெரிவித்தார்.எனினும், தற்போதைய நிலையில் இவ்வாறான குற்றச்சாட்டுகள் வரும் போது, அதனை விசாரணை செய்வதற்கு தமது அரசாங்கம் எவ்வித தடையையும் ஏற்படுத்தாது என்றும் தெரிவித்தார்.ஆனால், முறைப்பாடு செய்தவுடன் அவர்களுக்கு எதிராக உடனடியாக எவ்வித நடவடிக்கையையும் எடுக்க முடியாது என அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.