• Dec 24 2024

13 வகையான தரமற்ற மருந்துகள் இறக்குமதி - குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு

Chithra / Dec 23rd 2024, 1:01 pm
image

 

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 13 வகை மருந்துகள் முறையான தரமின்மை காரணமாக கடந்த இரண்டு வாரங்களுக்குள் பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் மற்றும் சிவில் உரிமைகள் சங்கத்தின் தலைவர் டொக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் 8 மருந்து வகைகள்,  இவ்வாரம் ஐந்து மருந்து வகைகள்  உள்ளடங்கலாக பதின்மூன்று மருந்து வகைகள் இவ்வாறு அகற்றப்பட்டுள்ளதாகக் கூறும் வைத்தியர், 

நீக்கப்பட்ட 8 வகையான மருந்துகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்ததாகவும் குறிப்பிட்டார்.

அவ்வாறான மருந்துகளை கொண்டு வந்தவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த மூன்று வருடங்களில் மாத்திரம் சுமார் 300 மருந்து வகைகள் பாவனையிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாகவும்,

அவை நிமோனியா, மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட பல தொற்று நிலைமைகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் என சமல் சஞ்சீவ தெரிவித்தார்.

ஒவ்வொரு வாரமும் இவ்வாறு தரமற்ற மருந்து வகைகள்  அகற்றப்படுவதாகவும், ஆனால் இந்த மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பில் பணியாற்றிய அதிகாரிகள் தொடர்பில் சுகாதார அமைச்சினால் முறையான வேலைத்திட்டமொன்றை ஸ்தாபிக்க முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சர் இவ்விடயங்கள் தொடர்பில் உடனடி கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அனைத்து அரச நிறுவனங்களும் மருந்துகளை இறக்குமதி செய்யும் பொறிமுறையில் தலையிட்டு,

அடுத்த வருடம் இந்நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் இல்லையெனில் வெற்றிகரமான முறைமை மாற்றத்தை நம்ப முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

13 வகையான தரமற்ற மருந்துகள் இறக்குமதி - குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு  இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 13 வகை மருந்துகள் முறையான தரமின்மை காரணமாக கடந்த இரண்டு வாரங்களுக்குள் பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் மற்றும் சிவில் உரிமைகள் சங்கத்தின் தலைவர் டொக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.கடந்த வாரம் 8 மருந்து வகைகள்,  இவ்வாரம் ஐந்து மருந்து வகைகள்  உள்ளடங்கலாக பதின்மூன்று மருந்து வகைகள் இவ்வாறு அகற்றப்பட்டுள்ளதாகக் கூறும் வைத்தியர், நீக்கப்பட்ட 8 வகையான மருந்துகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்ததாகவும் குறிப்பிட்டார்.அவ்வாறான மருந்துகளை கொண்டு வந்தவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, கடந்த மூன்று வருடங்களில் மாத்திரம் சுமார் 300 மருந்து வகைகள் பாவனையிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாகவும்,அவை நிமோனியா, மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட பல தொற்று நிலைமைகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் என சமல் சஞ்சீவ தெரிவித்தார்.ஒவ்வொரு வாரமும் இவ்வாறு தரமற்ற மருந்து வகைகள்  அகற்றப்படுவதாகவும், ஆனால் இந்த மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பில் பணியாற்றிய அதிகாரிகள் தொடர்பில் சுகாதார அமைச்சினால் முறையான வேலைத்திட்டமொன்றை ஸ்தாபிக்க முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சுகாதார அமைச்சர் இவ்விடயங்கள் தொடர்பில் உடனடி கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.அனைத்து அரச நிறுவனங்களும் மருந்துகளை இறக்குமதி செய்யும் பொறிமுறையில் தலையிட்டு,அடுத்த வருடம் இந்நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் இல்லையெனில் வெற்றிகரமான முறைமை மாற்றத்தை நம்ப முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement