• Nov 25 2024

இந்தியாவிலிருந்து மருந்து இறக்குமதி; அமைச்சருக்கு ஜனாதிபதியின் விசேட உத்தரவு

Chithra / Aug 30th 2024, 2:34 pm
image

 

தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பதிவு செய்யப்படாத மருந்து வகைகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு சுகாதார அமைச்சர் எடுத்துள்ள தீர்மானத்தை இடை நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரணவிற்கு இந்த பணிபுரையை ஜனாதிபதி விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன வெளியிட்டு நிகழ்வின் பின்னர் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின் போது இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.

மருந்து பொருள் இறக்குமதி செய்வதற்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்கள் இருக்கும் நிலையில் பதிவு செய்யப்படாத இந்திய நிறுவனம் ஒன்றில் மருந்து இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளிக்க கூடாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு பதிவு செய்யப்படாத நிறுவனத்திடம் இறக்குமதி செய்வது உள்நாட்டு விநியோகஸ்தர்களை அதிருப்தி அடையச் செய்யும் என ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரமேஷ் பத்திரணவிற்கு அறிவித்து, மருந்து பொருள் இறக்குமதியை இடை நிறுத்தியுள்ளார்.

இந்தியாவிலிருந்து மருந்து இறக்குமதி; அமைச்சருக்கு ஜனாதிபதியின் விசேட உத்தரவு  தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பதிவு செய்யப்படாத மருந்து வகைகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு சுகாதார அமைச்சர் எடுத்துள்ள தீர்மானத்தை இடை நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரணவிற்கு இந்த பணிபுரையை ஜனாதிபதி விடுத்துள்ளார்.ஜனாதிபதியின் கொள்கை பிரகடன வெளியிட்டு நிகழ்வின் பின்னர் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின் போது இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.மருந்து பொருள் இறக்குமதி செய்வதற்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்கள் இருக்கும் நிலையில் பதிவு செய்யப்படாத இந்திய நிறுவனம் ஒன்றில் மருந்து இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளிக்க கூடாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இவ்வாறு பதிவு செய்யப்படாத நிறுவனத்திடம் இறக்குமதி செய்வது உள்நாட்டு விநியோகஸ்தர்களை அதிருப்தி அடையச் செய்யும் என ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டி உள்ளார்.இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரமேஷ் பத்திரணவிற்கு அறிவித்து, மருந்து பொருள் இறக்குமதியை இடை நிறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement