தரமற்ற தேங்காய் எண்ணெயை நாட்டில் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
நேற்றையதினம் பாராளுமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
தரமற்ற தேங்காய் எண்ணெயை இந்த நாட்டில் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது எனவும், அவ்வாறான தேங்காய் எண்ணெய் மீண்டும் ஏற்றுமதி செய்யப்படும்.
உரிய ஆய்வுகளின் பின்னரே மீள் ஏற்றுமதி மேற்கொள்ளப்படும் எனவும், இறக்குமதி செய்யப்படும் சில தேங்காய் எண்ணெய்கள் உயர்தரமானவையா என கூற முடியாததால், அவற்றை தரப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இலங்கையில் தரமற்ற தேங்காய் எண்ணெய் இறக்குமதி samugammedia தரமற்ற தேங்காய் எண்ணெயை நாட்டில் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.நேற்றையதினம் பாராளுமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்தரமற்ற தேங்காய் எண்ணெயை இந்த நாட்டில் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது எனவும், அவ்வாறான தேங்காய் எண்ணெய் மீண்டும் ஏற்றுமதி செய்யப்படும்.உரிய ஆய்வுகளின் பின்னரே மீள் ஏற்றுமதி மேற்கொள்ளப்படும் எனவும், இறக்குமதி செய்யப்படும் சில தேங்காய் எண்ணெய்கள் உயர்தரமானவையா என கூற முடியாததால், அவற்றை தரப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.