தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சுகாதாரத் துறையில் உள்ள உயர் அதிகாரிகள் பலரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மற்றும் மருந்து விநியோக திணைக்களத்தின் பிரதிநிதிகள் பலரிடம் இவ்வாறான வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 6 பேர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வத்தளை, வெலிசறை மற்றும் களனி ஆகிய பகுதிகளிலுள்ள கொள்கலன் முனையங்களில் மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சுகாதார அமைச்சு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தரமற்ற மருந்து இறக்குமதி – சுகாதாரத் துறையின் உயர் அதிகாரிகளிடம் CID வாக்குமூலம் தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சுகாதாரத் துறையில் உள்ள உயர் அதிகாரிகள் பலரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மற்றும் மருந்து விநியோக திணைக்களத்தின் பிரதிநிதிகள் பலரிடம் இவ்வாறான வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, குறித்த இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 6 பேர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, வத்தளை, வெலிசறை மற்றும் களனி ஆகிய பகுதிகளிலுள்ள கொள்கலன் முனையங்களில் மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சுகாதார அமைச்சு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.