கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு வருகை தரும் யாத்ரீகர்கள் அதிக அளவு பொருட்களை எடுத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கை இராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது.
தலதா மாளிகைக்கு வருகை தரும் யாத்ரீகர்களுக்கான பாதுகாப்பு மற்றும் தங்குமிட வசதிகளை வழங்குவதைக் கருத்தில் கொண்டு இராணுவம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
தலதா கண்காட்சி நடைபெறும் காலத்தில், தலதா மாளிகையைச் சுற்றியுள்ள வளாகத்தின் பாதுகாப்பிற்காகவும், வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செயல்படுத்தப்படும் என்றும் இராணுவம் அறிவித்துள்ளது.
பெரிய பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்ட போதிலும், யாத்ரீகர்கள், இதில் கவனம் செலுத்தவில்லை என்று இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று 100,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால்இ புனித பல் சின்னத்தை வணங்கவும், மரியாதை செலுத்தவும் இன்று கண்டிக்கு வருவதைத் தவிர்க்குமாறு பொலிஸார் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
புனித பல் நினைவுச்சின்னத்தின் சிறப்பு கண்காட்சி இன்று தவிர மேலும் ஏழு நாட்களுக்கு தொடரும் என்பதால், இன்றைய தினத்தைத் தவிர்த்து, எதிர்கால நாட்களைப் பயன்படுத்துமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நேற்று 120,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித பல் நினைவுச்சின்னத்தை வழிபட்டு மரியாதை செலுத்தியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ஸ்ரீ தலதா மாளிகைக்கு வருகைதரும் மக்களுக்கு படையினரின் முக்கிய அறிவிப்பு கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு வருகை தரும் யாத்ரீகர்கள் அதிக அளவு பொருட்களை எடுத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கை இராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது.தலதா மாளிகைக்கு வருகை தரும் யாத்ரீகர்களுக்கான பாதுகாப்பு மற்றும் தங்குமிட வசதிகளை வழங்குவதைக் கருத்தில் கொண்டு இராணுவம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.தலதா கண்காட்சி நடைபெறும் காலத்தில், தலதா மாளிகையைச் சுற்றியுள்ள வளாகத்தின் பாதுகாப்பிற்காகவும், வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செயல்படுத்தப்படும் என்றும் இராணுவம் அறிவித்துள்ளது.பெரிய பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்ட போதிலும், யாத்ரீகர்கள், இதில் கவனம் செலுத்தவில்லை என்று இராணுவம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் இன்று 100,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால்இ புனித பல் சின்னத்தை வணங்கவும், மரியாதை செலுத்தவும் இன்று கண்டிக்கு வருவதைத் தவிர்க்குமாறு பொலிஸார் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.புனித பல் நினைவுச்சின்னத்தின் சிறப்பு கண்காட்சி இன்று தவிர மேலும் ஏழு நாட்களுக்கு தொடரும் என்பதால், இன்றைய தினத்தைத் தவிர்த்து, எதிர்கால நாட்களைப் பயன்படுத்துமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.நேற்று 120,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித பல் நினைவுச்சின்னத்தை வழிபட்டு மரியாதை செலுத்தியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.