• Sep 19 2024

கொழும்பு சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு - இன்று மூடப்படும் வீதி! SamugamMedia

Chithra / Mar 4th 2023, 10:11 am
image

Advertisement

இன்று (04) காலை 09 மணி முதல் நாளை (05) நண்பகல் 12 மணி வரை மூடப்படும் வீதியொன்று தொடர்பில் பொலிஸார் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டிய சந்தியில் இருந்து கொலன்னாவை சந்திக்கு செல்லும் வீதியே இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதற்கமைய, கொழும்பிற்கு செல்லும் வாகனங்கள் அவிசாவளை வீதியின் கொடிகாவத்தை சந்தியில் இடது பக்கமாக திரும்பி கொதடுவை நகரில் கொலன்னாவை ஊடாக தெமடகொடை நோக்கி பயணிக்க முடியும்.

மேலும், கொழும்பில் இருந்து வௌியேறும் வாகனங்கள் தெமடகொடை கொலன்னாவை வீதியின் கொலன்னாவை சந்தியில் வலது பக்கமாக திரும்பி கொதடுவை நகரில் இடது பக்கமாக திரும்பி கொடிகாவத்தை நகரில் வலது பக்கமாக திரும்பி அவிசாவளை கொழும்பு வீதிக்கு பயணிக்க முடியும்.

தெமடகொடை கொலன்னாவை வீதியின் கொலன்னாவை எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு அருகில் இடது பக்கமாக திரும்பி மீதொடுமுல்லை வீதி ஊடாக மீண்டும் அவிசாவளை கொழும்பு வீதிக்கு பயணிக்க முடியும் என பொலிஸார் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கொழும்பு சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு - இன்று மூடப்படும் வீதி SamugamMedia இன்று (04) காலை 09 மணி முதல் நாளை (05) நண்பகல் 12 மணி வரை மூடப்படும் வீதியொன்று தொடர்பில் பொலிஸார் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளனர்.வெல்லம்பிட்டிய சந்தியில் இருந்து கொலன்னாவை சந்திக்கு செல்லும் வீதியே இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அதன்படி, குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதற்கமைய, கொழும்பிற்கு செல்லும் வாகனங்கள் அவிசாவளை வீதியின் கொடிகாவத்தை சந்தியில் இடது பக்கமாக திரும்பி கொதடுவை நகரில் கொலன்னாவை ஊடாக தெமடகொடை நோக்கி பயணிக்க முடியும்.மேலும், கொழும்பில் இருந்து வௌியேறும் வாகனங்கள் தெமடகொடை கொலன்னாவை வீதியின் கொலன்னாவை சந்தியில் வலது பக்கமாக திரும்பி கொதடுவை நகரில் இடது பக்கமாக திரும்பி கொடிகாவத்தை நகரில் வலது பக்கமாக திரும்பி அவிசாவளை கொழும்பு வீதிக்கு பயணிக்க முடியும்.தெமடகொடை கொலன்னாவை வீதியின் கொலன்னாவை எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு அருகில் இடது பக்கமாக திரும்பி மீதொடுமுல்லை வீதி ஊடாக மீண்டும் அவிசாவளை கொழும்பு வீதிக்கு பயணிக்க முடியும் என பொலிஸார் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement